/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வெ.கோவிலில் புதிய திட்ட பணி: ரூ.1.11 கோடி மதிப்பீட்டில் துவக்கம்
/
வெ.கோவிலில் புதிய திட்ட பணி: ரூ.1.11 கோடி மதிப்பீட்டில் துவக்கம்
வெ.கோவிலில் புதிய திட்ட பணி: ரூ.1.11 கோடி மதிப்பீட்டில் துவக்கம்
வெ.கோவிலில் புதிய திட்ட பணி: ரூ.1.11 கோடி மதிப்பீட்டில் துவக்கம்
ADDED : மார் 15, 2024 11:49 PM
திருப்பூர்:வெள்ளகோவில் ஒன்றியம், வள்ளியரச்சல் மற்றும் கம்பளியம்பட்டி ஊராட்சிகளில், புதிய திட்ட பணி துவக்க விழா நேற்று நடைபெற்றது.
வள்ளியரச்சல் ஊராட்சியில், 3.96 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், மேட்டாங்காட்டு வலசு முதல் வள்ளியரச்சல் முதல் வீதியில் கான்கிரீட் ரோடு; 3.19 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேட்டாங்காடு - வள்ளியரச்சல் இரண்டாவது வீதி; 12.81 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், புதிய ஆதிதிராவிடர் காலனியிலும்; 3.85 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், சம்பாம்பாளையம் நாடார் பகுதியில் கான்கிரீட் ரோடு. கணபதிபாளையத்தில், 32.21 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வள்ளியரச்சல் ஊராட்சி அலுவலகம் கட்டுமான பணி.
கம்பளியம்பட்டியில், அங்காளம்மன் நகர், ஆதிதிராவிடர் காலனி இரண்டாவது மற்றும் நான்காவது வீதிகளில், தலா 3.25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கான்கிரீட் ரோடு.
கம்பளியம்பட்டி ஆதிதிராவிடர் காலனியில், 14.44 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சேமிப்பு கிடங்கு உள்பட மொத்தம், 1.11 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகளை, அமைச்சர் சாமிநாதன் துவக்கிவைத்தார்.
ஊதியூர் பழநி பாதயாத்திரை தேவஸ்தான மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில், பழங்குடியினர் மேம்பாட்டு திட்டத்தில், தாராபுரம் தாலுகா, சி.அம்மாபட்டியை சேர்ந்த, 31 பழங்குடியின மக்களுக்கு, தலா, 5 லட்சம் ரூபாய் வீதம், மொத்தம், 1.55 கோடி ரூபாய் மதிப்பில் இலவச வீடு கட்டுவதற்கான ஆணையை, அமைச்சர் வழங்கினார்.

