/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
எல்லை மாறிய குப்பையால் வந்த தொல்லை
/
எல்லை மாறிய குப்பையால் வந்த தொல்லை
ADDED : ஆக 06, 2025 12:29 AM

திருப்பூர் மாநகராட்சியில் தினமும், 800 டன் குப்பை கழிவுகள் சேகரமாகிறது. இவை, ஆங்காங்கே உள்ள பாறைக்குழிகளில் கொட்டப்பட்டு வந்த நிலையில், அருகில் வசிக்கும் பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால், பாறைக்குழிகளில் குப்பை கொட்டுவது நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த பிரச்னையால், குப்பை கழிவுகள் அந்தந்த வார்டு பகுதியிலேயே கொண்டு சென்று கொட்டுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவ்வகையில், 17வது வார்டில் கஞ்சம்பாளையம் பகுதியில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. தற்போது, 19வது வார்டு பகுதியிலிருந்து கொண்டு வரும் குப்பையும் இந்த இடத்தில் குவிக்கப்பட்டு வருகிறது. இதற்கு அந்த வார்டு கவுன்சிலர் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.