/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பழையன கழிந்தது... புதியன புகுந்தது!
/
பழையன கழிந்தது... புதியன புகுந்தது!
ADDED : ஜன 18, 2024 12:37 AM

அவிநாசி : வீடுகளில் பயன் படுத்தி வீசியெறிப்படும் பொருட்களில் இருந்து, வணிக பயன்பாட்டுக்குரிய பொருட்களை யோசனை செய்ய முடியும் என, மாணவர்களுக்கு யோசனை தெரிவிக்கப்பட்டது.
அவிநாசி அரசு கலைக்கல்லுாரி வணிகவியல் துறை சார்பில், மாணவர்களின் திறன் மேம்படுத்தும் திட்டமான, 'புதுமையாளர் தினம்' என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கல்லுாரி முதல்வர் நளதம், தலைமை வகித்தார்.இதில், வீடுகளில் பயன்படுத்தப்படும் ேஷாகேஸ் பொருட்கள், பேப்பர் பேக், பிளாஸ்டிக் கழிவு பாட்டில்களில் இருந்து, பேனா ஸ்டாண்டு உள்ளிட்ட பொருட்களை தயாரித்தனர்.
நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த துறை தலைவர் செல்வதரங்கிணி கூறுகையில், ''மாணவர்களின் திறமை மற்றும் புதுமையான சிந்தனையை புதுமையான தயாரிப்புக்கு வழிகாட்டுவது தான் இந்நிகழ்ச்சியின் நோக்கம். வீடுகளில் உள்ள பொருட்கள், வீணாகும் பொருட்களை கொண்டு, வர்த்தக நோக்கில் புதிய பொருட்களை கண்டுபிடிக்கும் ஆர்வம், மாணவர்கள் மத்தியில் வந்திருக்கிறது,'' என்றார். உதவி பேராசிரியர்கள் புவனேஸ்வரி, சுசித்ரா, மோனிஷா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.