sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இதயத்தில் அன்பு சுரப்பவரே தாயுமானவர் குன்றக்குடி ஆதீனம் சொல்கிறார்

/

இதயத்தில் அன்பு சுரப்பவரே தாயுமானவர் குன்றக்குடி ஆதீனம் சொல்கிறார்

இதயத்தில் அன்பு சுரப்பவரே தாயுமானவர் குன்றக்குடி ஆதீனம் சொல்கிறார்

இதயத்தில் அன்பு சுரப்பவரே தாயுமானவர் குன்றக்குடி ஆதீனம் சொல்கிறார்


ADDED : டிச 29, 2024 07:42 AM

Google News

ADDED : டிச 29, 2024 07:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பல்லடம் : ''இதயத்தில் அன்பைச் சுரப்பவரே தாயுமானவர்'' என, பல்லடத்தில் நடந்த வான் மழை கருத்தரங்கில், குன்றக்குடி ஆதீனம் கூறினார். பல்லடம் 'வனம்' அமைப்பின் வான் மழை மாதாந்திர கருத்தரங்கம் மற்றும் பேரூர் ஆதீனம் சாந்தலிங்க ராமசாமி அடிகளாரின், 100வது ஆண்டு பெருவிழா ஆகியவை நடந்தன.

குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம் தெய்வசிகாமணி பொன்னம்பல தேசிக பரமாச்சாரியசுவாமிகள் பேசியதாவது:

தமிழ் மொழிக்கு ஒற்றை எழுத்தாக ஆய்த எழுத்து உள்ளது போல், சமய உலகுக்கு குன்றக்குடி ஆதீனம், பேரூர் ஆதீனம் மற்றும் சிரவை ஆதீனம் ஆகியோர் உள்ளனர். மறைந்தாலும், உலக மக்கள் மனதில் மறையாமல் இருப்பவர்கள்தான் மகாசன்னிதானங்கள். மனித குல சமத்துவத்தை நிலை நிறுத்துவதற்காக பல்வேறு ஆன்மீக போராட்டங்களை இவர்கள் சந்தித்தனர். நமக்குள் ஒருவராய், நம்மில் ஒருவராய் இறைவன் கலந்திருப்பதாக கருதுவது தான் நமது சமய வாழ்க்கை.

இறைவனே நமக்குத் தாய், தந்தையுமானவர். இதயத்தில் அன்பை சுரக்கும் போது ஆணும் தாயாக மாறுகிறான். இதன் காரணமாகவே, இறைவனுக்கு பெயரும் தாயுமானவர் என்று ஏற்பட்டது. 'கடவுளைப் போற்று; மனிதனை நினை' என்பதுதான் ஆன்மிகத்தின் தளம் என்பதை மகாசன்னிதானங்கள் வலியுறுத்தினர்.

எதுவுமே மக்கள் இயக்கமாக மாறினால் தான் வெற்றி பெறும் என்பதை சன்னிதானங்கள் நன்கு உணர்ந்திருந்தனர். நமது பிரார்த்தனைகள், வழிபாடுகள் அனைத்தும் பேரங்களாக, வணிகமயமாக மாறி விட்டது.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக, 'வனம்' அமைப்பின் செயலாளர் சுந்தரராஜ் வரவேற்றார். பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், தென்சேரிமலை ஆதீனம் முத்து சிவராமசாமி அடிகளார், கோவை காமாட்சிபுரி ஆதீனம் பஞ்சலிங்கேஸ்வரர், தம்பிரான் சுவாமிகள், ராம்ராஜ் காட்டன் நிறுவனர் நாகராஜன், வனம் அமைப்பின் தலைவர் சின்னசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வனம் அமைப்பின் செயல் தலைவர் பாலசுப்பிரமணியம், பொருளாளர் விஸ்வநாதன் மற்றும் நிர்வாகிகள் சுந்தரமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர். இயக்குனர் அனந்தகிருஷ்ணன் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us