/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
டிரைவர்களை வரவேற்க வழிநெடுக குழி 'டிப்போ - 2' செல்வதற்கு தொடரும் 'வலி'
/
டிரைவர்களை வரவேற்க வழிநெடுக குழி 'டிப்போ - 2' செல்வதற்கு தொடரும் 'வலி'
டிரைவர்களை வரவேற்க வழிநெடுக குழி 'டிப்போ - 2' செல்வதற்கு தொடரும் 'வலி'
டிரைவர்களை வரவேற்க வழிநெடுக குழி 'டிப்போ - 2' செல்வதற்கு தொடரும் 'வலி'
ADDED : மே 14, 2025 07:07 AM

திருப்பூர்; திருப்பூர், காங்கயம் ரோட்டிலுள்ள அரசு போக்குவரத்து கழக 'டிப்போ - 2' செல்லும் வழி படுமோசமாக இருப்பதால், டிரைவர்கள் கடும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர்.
திருப்பூர் மண்டலத்தில் இரண்டு பஸ் டிப்போக்கள் ஒரே இடத்தில் உள்ளது. தினமும், 185 பஸ்கள் வந்து செல்கின்றன. டிப்போவுக்கு வரும் ஒரு கி.மீ., துாரம் காங்கயம் மெயின் ரோடு சேதமாகி, குழியாக உள்ளது. அரசு பஸ்கள் ஒரு ஆட்டம் கண்ட பின் டிப்போவுக்கு வர வேண்டியுள்ளது. காங்கயம் ரோட்டில், போக்குவரத்து கழக டிப்போ - 1 மற்றும் டிப்போ - 2 செயல்படுகிறது.
தினமும் நள்ளிரவு இங்கு வரும் தொலைதுார, நகர பேருந்துகள், டீசல் நிரப்பி விட்டு அதிகாலையில் பயணத்துக்கு புறப்பட்டு செல்கிறது; பராமரிப்பு, 24 மணி நேரமும் மேற்கொள்ளப் படுகிறது. இதற்காக பகல் மற்றும் இரவில் பஸ்கள் வந்து செல்கின்றன.
திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்ட் மற்றும் கோவில்வழியில் இருந்து பஸ்கள் டிப்போ வரும் வழித்தடமாக, உஷா தியேட்டர் சிக்னல் சந்திப்பு, கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு துவங்கி டிப்போ நுழைவு வாயில் வரை காங்கயம் மெயின் ரோட்டில் ஆறு இடங்களில் சாலையில் குழி உள்ளது. டிப்போ 2 க்கு செல்லும் வழியில் விநாயகர் கோவில் முன்புறம் சாலை தார் இல்லாமல் முழுதும் சேதமாகி மண், கற்கள் குவியலாக உள்ளது. புதிய பஸ் ஸ்டாண்ட்டில் இருந்து திருச்சி மார்க்கமாக செல்லும் பஸ்கள் வரும் வளம் பாலம் சாலை குண்டும் குழியுமாகவே உள்ளது.
அரசு பஸ் டிரைவர்கள் சிலர் கூறியதாவது:
நீண்ட துாரம், நாள் முழுதும் பணி மேற்கொண்டு சோர்வுடன் தான் டிப்போவுக்கு பஸ்களை இயக்கி வருகிறோம். டிரைவர்கள் சிலர் பணியை துவங்க தங்களது வாகனங்களில் அதிகாலை, நள்ளிரவு நேரங்களில் வேகமாக இச்சாலையில் தான் வருகின்றனர். திருப்பூர் - காங்கயம் மெயின் ரோட்டில், பெரிய குழிகள் இருப்பது குறித்து பலமுறை புகார் தெரிவித்தும், சாலையை சரிசெய்யவில்லை.
விநாயகர் கோவில் அருகே குறுகிய சாலை தான். இவ்விடத்தை கடக்கும் பஸ்கள் அப்படியே ஒருபுறம் ஏறி, இறங்குகிறது. ரோடு போட வேண்டும்; முதல்கட்டமாக நெடுஞ்சாலைத்துறையினர் 'பேட்ஜ்ஒர்க்' மட்டுமாவது மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர்கள் ஆதங்கப்படுகின்றனர்.

