/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கொண்டத்துக் காளியம்மன் கோவிலில் பாலாலயம்
/
கொண்டத்துக் காளியம்மன் கோவிலில் பாலாலயம்
ADDED : ஆக 20, 2025 11:28 PM

பெருமாநல்லுார்; பெருமாநல்லுாரிலுள்ள கொண்டத்துக்காளியம்மன் கோவிலில், திருப்பணி துவங்கியுள்ளது. இதற்காக, பாலாலய பூஜை நேற்று நடைபெற்றது.
கோவிலில், ஐந்து நிலை ராஜ கோபுரம், திருமாளிகை பக்தி மண்டபம், வசந்த மண்டபம் ஆகிய திருப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. முதல் கட்டமாக, 66 அடி உயரத்தில், ஐந்து நிலை கொண்ட ராஜ கோபுரம் கட்டும் பணி நடந்து வருகிறது.
இந்நிலையில், திருப்பணிகள் மேற்கொள்ள கோவில் மூலவர் மற்றும் விமானம் தவிர இதர பரிவார தெய்வங்களுக்கு பாலாலயம் நேற்று மாலை நடந்தது.
கொண்டத்து காளியம்மனுக்கு சிறப்பு பூஜையை தொடர்ந்து, நாகராஜ் குருக்கள் தலைமையில் சிறப்பு ஹோமம் நடைபெற்றது.
மூலவர் மற்றும் விமானம் தவிர கோவில் வளாகத்தில் இருந்தமுத்துகுமாரசாமி, கொடி மரம், பலி பீடம், யாழி வாகனம், கன்னிமார் தெய்வங்கள் உள்ளிட்ட தெய்வ சிலைகள் அகற்றப்பட்டு சகுன விநாயகர் கோவில் மண்டபத்தில் வைக்கப்பட்டது.
நிகழ்ச்சியில், கோவில் அறங்காவலர் குழு தலைவர் மனோகரன் மற்றும் அறங்காவலர்கள், பக்தர்கள், அறநிலையத்துறை அதிகாரிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

