/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
போதையின் பாதை; மீட்டெடுக்க மையம்
/
போதையின் பாதை; மீட்டெடுக்க மையம்
ADDED : ஆக 02, 2025 11:18 PM

திருப்பூர்: தமிழக அரசின் உயர் கல்வித்துறை அறிவுறுத்தலின் படி, திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி என்.எஸ்.எஸ்., அலகு - 2 சார்பில், அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் உள்ள குடிபோதை தடுப்பு மற்றும் மறுவாழ்வு மையத்தை, மாணவர்கள் பார்வையிட்டனர்.
அங்கு 'போதையில்லா தமிழ்நாடு' விழிப்புணர்வு நடைபெற்றது.என்.எஸ்.எஸ்., அலகு - 2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார், முன்னிலை வகித்தார்.
மனநல மருத்துவர் செந்தில்குமார், மாணவர்கள் மத்தியில் பேசுகையில், ''போதை என்பது வாழ்க்கையை சீரழிக்கும் கொடிய விஷம். உடல்நலம், மனநலம் பாதிக்கப்பட்டு, வாழ்க்கையை இழந்தவர்களுக்கு மறுவாழ்வு வழங்கும் நோக்கில், இந்த மையம் செயல்படுகிறது.
போதையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, பல்வேறு மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. போதைக்கு அடிமையானவர்களை ஒதுக்காமல், அவர்களை அரவணைக்க வேண்டும்.
யாரோனும் போதைக்கு அடிமையாகியிருந்தால், அவர்களை மீட்டெடுத்து நல்வாழ்வு அளிக்க முயற்சி செய்ய வேண்டும்,' என்றார்.உளவியல் துறை நிபுணர்கள் செல்வநாதன், ஜெயஸ்ரீ, மனநல சமூக பணியாளர் ஜெயலட்சுமி ஆகியோர் பங்கேற்றனர்.
இதற்கான ஏற்பாடுகளை, மருத்துவ கல்லுாரி டீன் பத்மினி, மனநலத் துறை தலைவர் விஸ்வநாதன் மற்றும் கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.