/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மக்கள் நீதிமன்றம் 13ம் தேதி கூடுகிறது
/
மக்கள் நீதிமன்றம் 13ம் தேதி கூடுகிறது
ADDED : டிச 11, 2025 04:50 AM
திருப்பூர்: மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அறிக்கை:
நிலுவையில் உள்ள வழக்குகளில், சமரசம் செய்யக்கூடிய குற்றவியல், காசோலை, வங்கி கடன், மோட்டார் வாகனம், குடும்ப பிரச்னை, உரிமையியல், சொத்து உட்பட பல வழக்கு களுக்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் விசாரிக்கப்பட்டு சட்டப்படி, சமரச தீர்வு காணப்படும்.
மக்கள் நீதிமன்றம் முன்பு தீர்வு காணப்படும் வழக்குகளுக்கு மேல்முறையீடு கிடையாது. மேலும், நீதிமன்ற கட்டணம் திரும்ப கொடுக்கப்படும். திருப்பூர், அவிநாசி, தாராபுரம், காங்கயம், மடத்துக்குளம், பல்லடம், உடுமலை, ஊத்துக்குளி நீதிமன்றங்களில் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் வாயிலாக வழக்குகளுக்கு தீர்வு காணப்படும்.

