ADDED : ஜூன் 22, 2025 11:42 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் - அவிநாசி ரோடு, குமார் நகரில் மாநகராட்சிக்குச் சொந்தமான குடிநீர் மேல்நிலைத் தொட்டி வளாகம் உள்ளது. இங்கு தற்போது இரண்டு மேல்நிலைத் தொட்டிகளும் ஒரு நிலமட்டத் தொட்டியும் கட்டப்பட்டுள்ளது.
வளாகத்தைச் சுற்றிலும் ஆளுயர சுற்றுச் சுவர் அமைக்கப்பட்டிருந்தது. பலவீனமாக இருந்ததால் சுற்றுச் சுவரை இடித்து, புதிதாக கட்ட திட்டமிடப்பட்டது. இதற்காக 13.5 லட்சம் ரூபாய் மதிப்பில் சுற்றுச் சுவர் மற்றும் நுழைவாயில் கேட் ஆகியன அமைக்க முடிவு செய்யப்பட்டது. பழைய சுவர் இடித்து அகற்றப்பட்டது. தற்போது அங்கு புதிய சுற்றுச் சுவர் கட்டும் பணி துவங்கியுள்ளது.