/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கரும்பு ஜூஸ் மெஷின் திருடியவர் கைது
/
கரும்பு ஜூஸ் மெஷின் திருடியவர் கைது
ADDED : செப் 27, 2024 11:26 PM
திருப்பூர்: வெள்ளகோவில், குட்டைக்காடு பகுதியைச் சேர்ந்தவர் மாலதி, 39. கோவை ரோட்டில், பெட் ரோல் பங்க் அருகே கரும்பு ஜூஸ் கடை நடத்தி வருகிறார்.
சில நாட்களாக அவர் கடையைத் திறக்கவில்லை. கடந்த 15ம் தேதி வந்து பார்க்கும் போது கரும்பு பிழியும் மெஷினை காணவில்லை. இது குறித்த புகாரின் பேரில் வெள்ளகோவில் போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை ஒத்தக்கடை பகுதியில் போலீசார் நடத்திய வாகன சோதனையின் போது, பிடிபட்ட நபரிடம் விசாரித்தனர். அவர் நாமக்கல், ஓலப்பாளையத்தைச் சேர்ந்த கதிரவன், 36, என்பதும், கரும்பு பிழியும் மெஷின் திருடியதும் தெரிந்தது. போலீசார் அவரைக் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.