தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ குழாய் பதிப்பு பணி விரைந்து முடிக்க வேண்டும்: மா.கம்யூ.

குழாய் பதிப்பு பணி விரைந்து முடிக்க வேண்டும்: மா.கம்யூ.

குழாய் பதிப்பு பணி விரைந்து முடிக்க வேண்டும்: மா.கம்யூ.


ADDED : ஆக 25, 2026 09:42 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 25, 2026 09:42 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்:

அவிநாசி ரோட்டில் குடிநீர் குழாய் பதிப்புபணியை விரைந்து முடிக்க, மா.கம்யூ. வேண்டுகோள் விடுத்துள்ளது. 

இது குறித்து, திருப்பூர் மாவட்ட மா.கம்யூ. செயலாளர் மூர்த்தி அறிக்கை: 

திருப்பூர் – அவிநாசி ரோடு, நகர் பகுதியில் மாநகராட்சி சார்பில் குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடக்கிறது. இதற்காக, திருப்பூருக்குள் வரும் வாகனங்கள் 60 அடி  ரோடு, பி.என். ரோடு வழியாக திருப்பி விட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நாளுக்குள் பணி நிறைவடையும் என  தெரிவிக்கப்பட்டது. ஆனால், 2 மாதமாகியும் பணிகளை முடிக்கவில்லை.

தொழில் நகரமான திருப்பூரில் பிரதான ரோடு,  வழியாக வரும் வாகனங்கள், பயணிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகின்றனர். கல்வி நிலையங்கங்கள் மருத்துவமனைகள், வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் என சென்று வருவோர் பெரிதும் சிரமப்படுகின்றனர். விபத்துகளும் அதிகரிக்கிறது. எனவே, அவிநாசி ரோட்டை பணிகள் விரைந்து முடித்து, போக்குவரத்து அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார். 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us