/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'முதல்வர் படைப்பகம்' அமைய உள்ள இடத்தை... மாற்ற வேண்டும்; கலெக்டர் ஆபீசில் அமைக்க விவசாயிகள் யோசனை
/
'முதல்வர் படைப்பகம்' அமைய உள்ள இடத்தை... மாற்ற வேண்டும்; கலெக்டர் ஆபீசில் அமைக்க விவசாயிகள் யோசனை
'முதல்வர் படைப்பகம்' அமைய உள்ள இடத்தை... மாற்ற வேண்டும்; கலெக்டர் ஆபீசில் அமைக்க விவசாயிகள் யோசனை
'முதல்வர் படைப்பகம்' அமைய உள்ள இடத்தை... மாற்ற வேண்டும்; கலெக்டர் ஆபீசில் அமைக்க விவசாயிகள் யோசனை
ADDED : டிச 03, 2025 06:01 AM

திருப்பூர்: கால்நடை பராமரிப்புத்துறைக்கென தானமாக வழங்கப்பட்ட நிலத்தில் 'முதல்வர் படைப்பகம்' அமைக்க மேற்கொள்ளபட்டுள்ள முயற்சிக்கு, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்ட் எதிரே கால்நடை மருத்துவமனை செயல்படுகிறது. இந்த இடம் கடந்த, 1926ல், விட்டல் தாஸ் சேட் என்பவரால், கால்நடை மருத்துவமனை மற்றும் கால்நடை பராமரிப்பு துறைக்கொன சொந்தமாக வழங்கப்பட்ட இடம்; 1.96 ஏக்கர் நிலம் இங்குள்ளது.
இங்கு, கால்நடை மருத்துவமனை, கால்நடை பல்கலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், கால்நடை நோய் புலனாய்வு பிரிவு என, கால்நடை தொடர்புடைய துறைகள் இயங்கி வருகிறது. கடந்தாண்டு, இந்த வளாகத்தில் பன்னோக்கு கால்நடை மருத்துவமனை கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், மருத்துவமனை வளாகத்தின் ஒரு பகுதியில், தமிழக அரசின், 'முதல்வர் படைப்பகம்' கட்டுவதற்காக திட்டமிடப்பட்டு, பணிகள் நடந்து வருகிறது. இதற்கு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி, மாநில தலைவர் சண்முகசுந்தரம், பொது செயலாளர் முத்து விஸ்வநாதன், திருப்பூர் மாவட்ட செயலாளர் ரமேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் நேற்று கா ல்நடை பராமரிப்பு இணை இயக்குனரிடம் மனு வழங்கினர்.
அதன்பின், ஈசன் முருகசாமி கூறியதாவது:
கால்நடை மருத்துவமனைக்கு, தினசரி, 150க்கும் மேற்பட்டோர் தங்கள் கால்நடைகளை பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக கூட்டி வருகின்றனர். கால்நடை பராமரிப்பு பணியை மட்டும் தான் இங்கு மேற்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையுடன் தான் இந்த இடம், கொடையாளரால் வழங்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே, இங்கு எம்.எல்.ஏ., அலுவலகம், பள்ளி வகுப்பறை கட்டடங்கள் கட்டுவதற்கு எடுக்கப்பட்ட முயற்சி, இத்தகைய நிபந்தனை காரணமாக கைவிடப்பட்டது.
இந்நிலையில் மீண்டும் அங்கு கட்டுமானப் பணி மேற்கொள்ள முயற்சி மேற்கொள்வது ஏற்புடையதல்ல; இம்முயற்சியை கைவிட வேண்டும். இல்லாவிடில், கால்நடைகளை கட்டி, போராட்டம் நடத்துவோம். மாறாக, கலெக்டர் அலுவலகத்தில் முதல்வர் படைப்பகம் அமைக்க அதிகா ரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

