/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரசிகர்களை ஈர்த்த 'திரவுபதி' நாடகம்
/
ரசிகர்களை ஈர்த்த 'திரவுபதி' நாடகம்
ADDED : டிச 08, 2024 02:58 AM

திருப்பூர்: திருப்பூர் ஷண்முகானந்த சங்கீத சபாவின், 18வது ஆண்டு இசை அமுதம் நிகழ்ச்சி நேற்று திருப்பூரில் துவங்கியது.
திருப்பூர், பி.எஸ்., சுந்தரம் ரோட்டில் செயல்படும், ஷண்முகானந்த சங்கீத சபா சார்பில், திருப்பூரில் ஆண்டுதோறும் இசை நிகழ்ச்சி திருப்பூரில் நடத்தப்படுகிறது.
அவ்வகையில், சபாவின், 18வது ஆண்டு நிகழ்ச்சியான, 'இசை அமுதம் - 2024' விழா நேற்று துவங்கியது. ஹார்வி குமாரசாமி மண்டபத்தில், சென்னை கோமல் தியேட்டர் நிறுவனத்தின் 'திரவுபதி' நாடகம் அரங்கேற்றப்பட்டது.
நிகழ்ச்சிக்கு ஷண்முகானந்த சங்கீத சபா தலைவர் ஆடிட்டர் ராமநாதன் தலைமை வகித்தார். துணை தலைவர் தனஞ்செயன், செயலாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தனர். முன்னதாக இணை செயலாளர் திருமேனி வரவேற்றார். நிகழ்ச்சியில் திரளான பார்வையாளர்கள் கலந்து கொண்டு நாடகத்தை ரசித்தனர். சபா பொருளாளர் மீனாட்சி சுந்தரம் நன்றி கூறினார்.
இசை விழாவில், இன்று (8ம் தேதி), மாலை 6:30 மணிக்கு, வயலின் இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதில் திருச்சூர் அனுரூப் மற்றும் கங்கா சசிதரன் இணைந்து வயலின் கச்சேரி நடத்தவுள்ளனர். நிகழ்ச்சியில், முத்துக்குளம் ஸ்ரீராக் - மிருதங்கம், திருப்புனித்துரா ஸ்ரீகுமார் - தவில் மற்றும் மாஞ்சூர் உண்ணிகிருஷ்ணன் - கடம் வாசிக்கின்றனர்.நிகழ்ச்சி ஏற்பாடுகளை திருப்பூர் ஷண்முகானந்த சங்கீத சபா நிர்வாகிகள் செய்துள்ளனர்.