/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கோழி இன நோய் ஆராய்ச்சி மையம் பயன்பாட்டுக்கு கொண்டு வரலாமே!
/
கோழி இன நோய் ஆராய்ச்சி மையம் பயன்பாட்டுக்கு கொண்டு வரலாமே!
கோழி இன நோய் ஆராய்ச்சி மையம் பயன்பாட்டுக்கு கொண்டு வரலாமே!
கோழி இன நோய் ஆராய்ச்சி மையம் பயன்பாட்டுக்கு கொண்டு வரலாமே!
ADDED : ஜூன் 17, 2025 11:16 PM

பல்லடம்; பல்லடம் அருகே கட்டப்பட்டுள்ள கோழி இன நோய் ஆராய்ச்சி மையத்தை முழுமையான பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என, பல்லடம் கறிக்கோழி ஒருங்கிணைப்புக் குழு (பி.சி.சி.,) கோரிக்கை விடுத்துள்ளது.
பல்லடத்தை அடுத்த, சின்னியகவுண்டம்பாளையம் கிராமத்தில், 8 கோடி ரூபாய் மதிப்பில், கோழி இன நோய் ஆராய்ச்சி மையம் கட்டப்பட்டுள்ளது.
இங்கு, கோழிகள், கால்நடைகளுக்கு ஏற்படும் நோய் பாதிப்புகள் குறித்து முன்கூட்டியே தெரிந்துகொண்டு ஆய்வுகள் அடிப்படையில் உரிய தீர்வு காணப்படும். மேலும், இதனுடன் நீர் பகுப்பாய்வு மையமும் இருப்பதால், தண்ணீர் குறித்த ஆய்வுகளையும் மேற்கொள்ள முடியும்.
இதற்காக, பல கோடி ரூபாய் மதிப்பிலான இயந்திரங்கள் இந்த ஆராய்ச்சி மையத்தில் நிறுவப்பட்டுள்ளன. இந்தியாவில், புனேவுக்கு அடுத்ததாக உள்ள ஆராய்ச்சி மையம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
மருத்துவர்கள், மருத்துவ ஆய்வக உதவியாளர்கள், பாதுகாவலர், துாய்மை பணியாளர்கள் என, 40க்கும் அதிகமான பணியாளர்கள் இருக்க வேண்டிய இடத்தில், 4 பேர் மட்டுமே வேலை பார்க்கின்றனர்.
இந்த ஆராய்ச்சி மையத்தை முழுமையான செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என, பல்லடம் கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு (பி.சி.சி.,) வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக பி.சி.சி., செயலாளர் சுவாதி கண்ணன் கூறியதாவது:
கடந்த, 2020ம் ஆண்டு திறப்பு விழா செய்யப்பட்ட இந்த ஆராய்ச்சி மையம், ஐந்து ஆண்டுகளாகியும் முழுமையான செயல்பாட்டுக்கு வராமல் உள்ளது. பல்லடம் சுற்றுவட்டார பகுதியில், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் உள்ள நிலையில், ஆராய்ச்சி மையம் முழுமையான செயல்பாட்டுக்கு வருவதால், கறிக்கோழி பண்ணையாளர்கள் பயனடைவார்கள்.
மேலும், பல கோடி ரூபாய் மதிப்பிலான இயந்திரங்கள் பாழாகி வருகின்றன. எனவே, கோழி இன நோய் ஆராய்ச்சி மையத்தை முழுமையான பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பான கோரிக்கை மனு, கலெக்டர் மற்றும் அமைச்சர் சாமிநாதனிடம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.