/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சாம்பல் பூசணி விலை உயர்வு கேரளாவுக்கு செல்வதால் மாற்றம்
/
சாம்பல் பூசணி விலை உயர்வு கேரளாவுக்கு செல்வதால் மாற்றம்
சாம்பல் பூசணி விலை உயர்வு கேரளாவுக்கு செல்வதால் மாற்றம்
சாம்பல் பூசணி விலை உயர்வு கேரளாவுக்கு செல்வதால் மாற்றம்
ADDED : ஜன 27, 2026 10:22 AM

உடுமலை: கேரளாவுக்கு சாம்பல் பூசணி அதிகளவு செல்வதால், விலை அதிகரித்து வருகிறது.
உடுமலை, மடத்துக்குளம் வட்டாரங்களில் கிணற்று பாசனத்துக்கு, இரு சீசன்களில், சாம்பல் பூசணி சாகுபடி செய்யப்படுகிறது. கேரளாவில், இவ்வகை பூசணிக்கு வரவேற்பு அதிகளவு உள்ளதால், அம்மாநில விற்பனையை இலக்காக வைத்து நடவு செய்கின்றனர்.
கடந்தாண்டு, கிலோ 1 ரூபாய் என விலை சரிந்து, பறிக்கும் கூலிக்கு கூட கட்டுப்படியாகவில்லை. சாகுபடி செய்த விவசாயிகள் நஷ்டமடைந்தனர்.
தற்போது, துங்காவி, தாந்தோணி, சின்னப்பன்புதுார் உள்ளிட்ட பல இடங்களில், பரவலாக சாம்பல் பூசணி சாகுபடி செய்து தற்போது அறுவடை துவங்கியுள்ளது. கேரளாவுக்கு மீண்டும் அதிகளவு இவ்வகை பூசணி செல்வதால், விலை அதிகரித்து வருகிறது.
கடந்த வாரம் கிலோ, 7 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டது; தற்போது கிலோ, 9 ரூபாயாக உயர்ந்துள்ளது. தொடர் மழையால் சாகுபடி பாதித்துள்ளது. எனவே தட்டுப்பாடு அதிகரித்து விலை உயர்ந்து வருகிறது. வரும் வாரங்களில் விலை மேலும் உயரும் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.

