/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நாட்டுக்காய்கறி விலை சரிவு; மலைக்காய்கறி விலையும் குறைந்தது
/
நாட்டுக்காய்கறி விலை சரிவு; மலைக்காய்கறி விலையும் குறைந்தது
நாட்டுக்காய்கறி விலை சரிவு; மலைக்காய்கறி விலையும் குறைந்தது
நாட்டுக்காய்கறி விலை சரிவு; மலைக்காய்கறி விலையும் குறைந்தது
ADDED : பிப் 17, 2025 11:30 PM
திருப்பூர்; உள்ளூர் காய்கறி விலை குறைவால், மலைக் காய்கறிகளும் தேக்கமாகி, அவற்றின் விலையும் குறைய துவங்கியுள்ளது.
வரத்து அதிகரிப்பால், தக்காளி விலை தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், பிற காய்கறிகளின் விலையும் குறைய துவங்கியுள்ளது. கத்தரி, வெண்டை, பாகற்காய், பீர்க்கன், அவரை உள்ளிட்ட காய்கறிகளின் விலை கிலோ, 40 - 50 ரூபாயாக குறைந்துள்ளது.
வரத்து அதிகரிப்பால், உள்ளூர் காய்கறிகளின் விலை குறைந்துள்ளதால், விற்பனை அதிகரித்துள்ளது. இதனால், பீட்ரூட், கேரட், பீன்ஸ் உள்ளிட்ட மலைகாய்கறிகள் மார்க்கெட்டில் தேக்க மாகியுள்ளது; இதனால், மலைக்காய்கறி விலையும் குறைந்துள்ளது.
நேற்று தென்னம்பாளையம் மார்க்கெட்டில் பீன்ஸ் கிலோ, 45 ரூபாய், கேரட் கிலோ, 55 ரூபாய், ஊட்டி பீட்ரூட், 50 ரூபாய்க்கு விற்றது. வழக்கமாக, பீன்ஸ், 65 ரூபாய், கேரட், 65 ரூபாய், ஊட்டி பீட்ரூட், 60 ரூபாய்க்கு விற்கப்படும். இவற்றின் விலை கிலோவுக்கு 10 - 20 ரூபாய் வரை குறைந்துள்ளது.
காய்கறிகள் விலை குறைய துவங்கியுள்ளதால், ரோட்டோர காய்கறி கடை, தள்ளுவண்டிகளில் காய்கறிகள் விற்பனை அதிகரித்துள்ளது. அனைத்து காய்கறிகளும் ஒரு சேர கிலோவாக வாங்கினால், 50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. காய்கறிகள் விலை குறைவால், இல்லத்தரசிகள் ஆறுதல் அடைந்துள்ளனர்.