/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'தொழிலாளர் பிரச்னைக்கு தீர்வு காணப்படும்'
/
'தொழிலாளர் பிரச்னைக்கு தீர்வு காணப்படும்'
ADDED : ஜன 30, 2024 12:08 AM
திருப்பூர்;தொழில் வளம் பங்களிப்போர் அமைப்பு சார்பில் தொழிற் துறை மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் ஏற்றுமதியாளர் சங்க அலுவலகத்தில் நேற்று நடந்தது.
ஏற்றுமதியாளர் சங்க தலைவர் சுப்ரமணியம், தொழில்வளம் பங்களிப்போர் அமைப்பு தலைவர் இளங்கோவன் முன்னிலை வகித்தனர். முன்னதாக பொது செயலாளர் திருக்குமரன் வரவேற்றார். அமைப்பு சார்பில், இணை செயலாளர் குமார் துரைசாமி, ஆலோசனை குழு உறுப்பினர் பரமசிவம், செயற்குழு உறுப்பினர் மேழிசெல்வன் கலந்து கொண்டனர்.
தொழிற்சங்க தரப்பில் பாலசுப்ரமணியன், ராமகிருஷ்ணன், பூபதி (எல்.பி.எப்.), சேகர் (ஏ.ஐ.டி.யு.சி.) விஸ்வநாதன் (ஏ.டி.பி.) பெருமாள், சிவசாமி ( ஐ.என்.டி.யு.சி.,) சம்பத் (சி.ஐ.டி.யு.) முத்துசாமி (எச்.எம்.எஸ்.) லட்சுமி நாராயணன், செந்தில் (பி.எம்.எஸ்.) சம்பத், மனோகரன் (எம்.எல்.எப்.) உள்ளிட்டோர் பங்கேற்றனர். எதிக்கல் டிரேடிங் இனிசியேட்டிவ் தென்மண்டல பொறுப்பாளர் அருணா பேசினார்.
தொழிற்சங்க தரப்பில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள்:பீஸ் ரேட், கான்ட்ராக்ட் முறை ஒழிக்கப்பட வேண்டும். தொழிலாளர்களுக்கு வீடு வழங்க வேண்டும். திறன் வளர்ப்பு பயிற்சி வழங்க வேண்டும். காப்பீடு திட்டம் வழங்க வேண்டும். தொழிலுக்கு சிக்கல் ஏற்படும் வேளைகளில் உரிய ஒத்துழைப்பு வழங்கப்படுகிறது.
தொழில் அமைப்பு தரப்பில், ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன் பேசுகையில், ''அனைத்து கருத்துகளும் பரிசீலிக்கப்படும். தொழிலாளர் பிரச்னைகள் உடனுக்குடன் தீர்வு காணப்படுகிறது. தொழிலாளர் நலன் காக்கப்பட்டால் மட்டுமே தொழிற்துறை சிறப்பாக இயங்கும். உரிய இடைவெளியில் இது போன்ற கருத்து பரிமாற்றம் மேற்கொள்ளப்படும்,'' என்றார்.