sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

எல்லை மீறியது தெரு நாய்களின் தொல்லை! உறங்கும் உள்ளாட்சி நிர்வாகங்கள் 'விழிக்குமா?'

/

எல்லை மீறியது தெரு நாய்களின் தொல்லை! உறங்கும் உள்ளாட்சி நிர்வாகங்கள் 'விழிக்குமா?'

எல்லை மீறியது தெரு நாய்களின் தொல்லை! உறங்கும் உள்ளாட்சி நிர்வாகங்கள் 'விழிக்குமா?'

எல்லை மீறியது தெரு நாய்களின் தொல்லை! உறங்கும் உள்ளாட்சி நிர்வாகங்கள் 'விழிக்குமா?'

1


ADDED : செப் 27, 2024 11:38 PM

Google News

ADDED : செப் 27, 2024 11:38 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் மாவட்ட மக்கள் எதிர்கொள்ளும் பிரதான பிரச்னைகளின் பட்டியலில், தற்போதைய சூழலில் முதலிடம் பிடித்திருப்பது, தெரு நாய்களின் தொல்லை. வீதி, தெருக்கள், சாலை என அனைத்து இடத்திலும் பல்கி பெருகியுள்ள நாய்களால், பொதுமக்கள் அச்சத்தின் உச்சத்தில் உறைந்துள்ளனர். அதிகாலை நடைபயிற்சி செய்வோர், இரவில் வீடு திரும்புவோர், தெருக்களில் நடமாடுவோர் என ஏராளமானோர் நாய்களால் விரட்டப்பட்டு கடிபடுகின்றனர்.

சாலையோரம் உள்ள 'பாஸ்ட் புட்' கடைகள், கோழி மற்றும் மீன் கடைகள் தான், தெருநாய்களுக்கான உணவு கேந்திரமாக மாறியிருக்கிறது. மாலை, இரவு நேரங்களில் ஒவ்வொரு 'பாஸ்ட் புட்' தள்ளுவண்டி, இறைச்சி கடைகளின் முன் ஏராளமான தெருநாய்கள், உணவுக் கழிவுக்காக காத்து கிடப்பதை பார்க்க முடியும்.

'சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழுவது சிறந்தது' என்ற எண்ணத்தில் தெரு நாய்களுடன் மல்லுக்கட்ட விரும்பாத மக்கள் பலர், இரவில் வீடு திரும்பும் போது, அவற்றுக்கு பிஸ்கட் உள்ளிட்ட ஏதேனும் உணவு கொடுத்து, பழக்கப்படுத்திக் கொள்கின்றனர்.

இருப்பினும், பலர் இன்னும் கடிபட்டு கொண்டே தான் இருக்கின்றனர். அவ்வகையில், இரண்டு நாள் முன் கூட, சாலையின் குறுக்கே சென்ற நாய், டூவீலரில் மோதியதில், தம்பதியர் கீழே விழுந்தனர். தொடர்ந்து வந்த டிப்பர் லாரி மோதியதில் இருவரும் இறந்தனர். இவ்வாறு தெரு நாய்களால் பல்வேறு வகையில், தொல்லை அதிகரித்து வரும் நிலையில், அவற்றை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையில் துளியும் வேகமில்லை என்பதுதான் பொதுமக்களின் ஒருமித்த குற்றச்சாட்டாக உள்ளது.

---

ஆடுகளுடன் போராட்டம்!

காங்கயம் சுற்றுவட்டார பகுதிகளில், தெரு நாய்களின் வெறியாட்டத்துக்கு, ஆடுகள் பலியாக துவங்கியிருக்கின்றன. ஆடுகளை பறிகொடுத்த விவசாயிகள், நேற்று முன்தினம் மற்றும் கடந்த இரு வாரங்களுக்க முன் கூட, இறந்த ஆடுகளுடன் காங்கயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன், காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இறந்த ஆடுகளை மூட்டையில் கட்டி, மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு எடுத்து வர முற்பட்ட போது, நல்லுார் காசிபாளையம் பகுதியில் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்; இது, அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன்பின், கலெக்டர் அலுவலகத்தில் பேச்சு நடத்த போலீசார் ஏற்பாடு செய்தனர்.

-----------------------

மவுனம் கலைக்கணும்!

நாய்களால் தாக்கப்பட்டு இறந்த ஆடுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்; நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும் என்ற எங்களின் கோரிக்கை மீது எவ்வித பதிலும் சொல்லாமல், கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் மவுனமாக இருப்பது ஏற்புடையதல்ல. நாய்களுக்கு கருத்தடை என்பது, எதிர்பார்த்த பலன் தருவதாக இருக்காது.

- வேலுசாமி

பி.ஏ.பி., வெள்ளகோவில் கிளை

கால்வாய் நீர்பாதுகாப்பு சங்க தலைவர்

---

சவாலான, சிக்கலான பணி

'ஏபிசி.,' எனப்படும் கருத்தடை அறுவை சிகிச்சை செய்து, நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த மட்டுமே சட்டத்தில் இடமுண்டு. இதனை செயல்படுத்த முதலில், தெரு நாய்களை விரட்டி பிடிக்க பயிற்சி பெற்றவர்கள் வேண்டும்; பிடித்த நாய்களை கொண்டு செல்ல வாகனம் வேண்டும்.

அந்த நாய்களை ஒரு நாள் தனிமையில் வைத்து, அதற்கு ஏதேனும் நோய் உண்டா என, பரிசோதிக்க வேண்டும்; சில நாய்களுக்கு 'கேன்சர்' தொற்று கூட இருக்க வாய்ப்புண்டு; அத்தகைய நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய மாட்டார்கள்.

அறுவை சிகிச்சை செய்த நாய்களை, 3,4 நாட்கள் வைத்து, அதற்கு தேவையான உணவு, நீர் வழங்கி கண்காணிக்க வேண்டும். பின், அந்த நாய் எங்கு பிடிக்கப்பட்டதோ, அதே இடத்தில் கொண்டு சென்று விட வேண்டும். ஒரு நாளைக்கு, அதிகபட்சம், 5 முதல், 6 பெண் நாய், 5 முதல், 10 ஆண் நாய்களுக்கு மட்டுமே கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய முடியும்.

- கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரி

---

உள்ளாட்சி நிர்வாகிகள் மெத்தனம்

வெள்ளகோவில் நகராட்சி சார்பில் தெருநாய்களுக்கு கருத்தடை செய்யப்படுகிறது. ஆனால், கருத்தடை மையம், உரிய கட்டமைப்புடன் இல்லை. வாரத்துக்கு, 20 நாய்களுக்கு மட்டுமே கருத்தடை செய்ய முடியும் என்பதால், உள்ளாட்சி நிர்வாகங்கள் இப்பணியை தொடர்ச்சியாக மேற்கொள்ள வேண்டும்.

பெரும்பாலான உள்ளாட்சிகளில் கருத்தடை மையங்கள் உரிய கட்டமைப்புடன் இல்லை; பல இடங்களில் குடோன்களாக பயன்படுத்தப்படுகின்றன. உள்ளாட்சி நிர்வாகங்கள் மனது வைத்தால் தான் தெரு நாய்களை கட்டுப்படுத்த முடியும்.

- முருகேஸ்வரி

இந்திய விலங்கு நலவாரிய பிரதிநிதி கூறியதாவது:

---

ஏட்டு சுரைக்காய்

கறிக்கு உதவாது!

தெரு நாய்கள் தொல்லை என்பது நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. நாய்களால் மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுவது தவிர்க்கப்பட வேண்டும்: இதுவும், நுகர்வோர் சட்டப்படி பொதுமக்களுக்கான உரிமை தான். ஆனால், தெரு நாய்களை பிடித்து கருத்தடை செய்வதாக, மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி நிர்வாகங்கள் கூறினாலும், அது பேச்சளவில் தான் இருக்கிறது. ஏட்டு சுரக்காய் கறிக்கு உதாவது என்பது போன்ற நிலையில் இந்த, தெரு நாய்கள் விவகாரத்தில் மாவட்ட நிர்வாகத்தின் செயல்பாடு உள்ளது.

- காதர்பாஷா

நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர்

---

இன்று, உலக வெறிநோய் தடுப்பு தினம்!

வெறிநாய் கடித்த, 5 நாட்களுக்கு பின், 6 ஆண்டுகள் வரை எப்போது வேண்டுமானாலும் அதன் பாதிப்பு தொடங்கலாம். காய்ச்சல், வாந்தி, தலைவலி ஏற்படும். உணவு உட்கொள்ள முடியாது; தண்ணீரை கண்டாலே பயம் ஏற்படும். வலிப்பு ஏற்பட்டு, பின், உயிரிழப்பு ஏற்படும்.'ரேபீஸ் தாக்கப்பட்ட நாய், ஓரிடத்தில் இருக்காது; அங்குமிங்கும் ஓடிக் கொண்டே இருக்கும். உணவு, நீர் உட்கொள்ளாது. ஒருவித பதட்டத்துடன் இருக்கும்; ரேபீஸ் தாக்கப்பட்டு அதிகபட்சம் நான்கு நாளில் இறந்து விடும். வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களுக்கு, 6 மாதத்துக்கு ஒரு முறை ரேபீஸ் தடுப்பூசி செலுத்த வேண்டும் என, அறிவுறுத்தப்படுகிறது.ஆண்டு தோறும், செப்., 28ல் உலக வெறி நோய் தடுப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலக வெறிநோய் தினத்தை முன்னிட்டு, கால்நடை மருந்தகங்களில், இலவசமாக ரேபீஸ் தடுப்பூசி செலுத்தும் முகாம் நடத்தப்பட இருக்கிறது.








      Dinamalar
      Follow us