sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

விவசாயிகளின் பிரச்னைகள் ஆளுங்கட்சிக்கு... இதுவரை எட்டவில்லை!தேர்தல் பிரசாரத்தில் எதிர்ப்பு காட்ட தீர்மானம்

/

விவசாயிகளின் பிரச்னைகள் ஆளுங்கட்சிக்கு... இதுவரை எட்டவில்லை!தேர்தல் பிரசாரத்தில் எதிர்ப்பு காட்ட தீர்மானம்

விவசாயிகளின் பிரச்னைகள் ஆளுங்கட்சிக்கு... இதுவரை எட்டவில்லை!தேர்தல் பிரசாரத்தில் எதிர்ப்பு காட்ட தீர்மானம்

விவசாயிகளின் பிரச்னைகள் ஆளுங்கட்சிக்கு... இதுவரை எட்டவில்லை!தேர்தல் பிரசாரத்தில் எதிர்ப்பு காட்ட தீர்மானம்


ADDED : மார் 17, 2024 11:57 PM

Google News

ADDED : மார் 17, 2024 11:57 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை:பிரதான பிரச்னைகளுக்காக பல்வேறு போராட்டங்கள் நடத்தியும், தி.மு.க., அரசும், மக்கள் பிரதிநிதிகளும் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை; எனவே, வரும் தேர்தலில், தங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய, உடுமலை, மடத்துக்குளம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட விவசாயிகள் தயாராகி வருகின்றனர்.

உடுமலை, மடத்துக்குளம் சட்டசபை தொகுதிகளில், விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. பி.ஏ.பி., மற்றும் அமராவதி அணை பாசனத்திட்டங்கள் வாயிலாக, பல லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

இந்த பாசன திட்டங்களில், நிலவும் நீண்ட கால மற்றும் தற்காலிக பிரச்னைகளுக்காக, பல ஆயிரம் விவசாயிகள் கோரிக்கை விடுத்தும், கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.

பிரதானத்தில் சிக்கல்


திருமூர்த்தி அணையிலிருந்து, கோவை, திருப்பூர் மாவட்டத்துக்குட்பட்ட 3.77 லட்சம் ஏக்கர் நிலங்களின் பாசனத்துக்கு, பி.ஏ.பி., பிரதான கால்வாயில் தண்ணீர் திறக்கப்படுகிறது.

ஒவ்வொரு மண்டல பாசனத்தின் போதும், இந்த கால்வாய் உடைந்து, நீர் நிர்வாகத்தில் சிக்கல் ஏற்படுகிறது. இது குறித்து, தமிழக அரசு தரப்பில் போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

நான்காம் மண்டல பாசனத்தின் போது, தண்ணீர் திறப்பில், பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டு, பல ஆயிரம் ஏக்கரில் மக்காச்சோளம் சாகுபடி பாதித்தது; குளங்களுக்கு தண்ணீர் கேட்டும் விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தினர்.

ஆனால், மாவட்ட தி.மு.க., அமைச்சர் மற்றும் இதர மக்கள் பிரதிநிதிகள் விவசாயிகள் கோரிக்கையை பரிசீலிக்கவே இல்லை.

இதனால், முன்னதாகவே துவங்கி கொளுத்தி வரும் கோடை வெப்பத்தால், அனைத்து பகுதிகளிலும், வறட்சி துவங்கியுள்ளது. நிலத்தடி நீர்மட்டம் சரிந்து, நிலங்கள் சாகுபடியின்றி தரிசாகும் நிலை உருவாகியுள்ளது.

இதே போல், அமராவதி ஆயக்கட்டு பாசனத்திலும் பிரதான கால்வாய் பராமரிப்பு, தடுப்பணை அமைத்தல் போன்ற திட்டங்களுக்கு, முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை முடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டும், மாநில அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.

நிவாரணமும் இல்லை


தேங்காய், கொப்பரை விலை வீழ்ச்சியால், பல லட்சம் தென்னை விவசாயிகள், தொழிலாளர்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.

தேங்காய் உடைப்பு போராட்டம் என அரசின் கவனத்தை ஈர்க்க, விவசாயிகள் நடத்திய போராட்டம் அனைத்தும் வீணானது. அ.தி.மு.க., ஆட்சிக்காலத்தில், வறட்சியால் பாதித்த தென்னை விவசாயிகளுக்கு, நிவாரணம் வழங்கப்பட்டது.

அதற்கான முயற்சிகளையும் கண்டுகொள்ளவில்லை. தேர்தல் நெருங்கும் நேரத்தில், பிரச்னைகளை மறைக்க கொப்பரை கொள்முதல் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

பி.ஏ.பி., நான்காம் மண்டல பாசனத்தில், இரண்டு சுற்று மட்டும் தண்ணீர் திறக்கப்பட்டதால், மக்காச்சோளத்தில், விளைச்சல் பாதியானது; பாதித்தவர்களுக்கும், காப்பீடு செய்தவர்களுக்கும் இதுவரை இழப்பீடு கிடைக்கவில்லை.

விவசாயிகள் கூறியதாவது: வாழ்வாதார பிரச்னைகளை முன்வைத்து போராடியும், தி.மு.க., மக்கள் பிரதிநிதிகள் விவசாயிகளை கண்டுகொள்ளவில்லை. குறைந்தபட்சம் விவசாய சங்க பிரதிநிதிகளையாவது அழைத்து பேசியிருக்கலாம்.

எந்த பிரச்னையும் கண்டுகொள்ளப்படாததால், விவசாயிகள் விரக்தியில் உள்ளனர். கோட்ட, மாவட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர் கூட்டத்தில் வழங்கும் மனுக்கள் மீதும் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை.

இறுதியாக, வரும் தேர்தல் அறிக்கையில், பயிர்க்கடன் ரத்து என்ற அறிவிப்பையாவது தி.மு.க., வினர் வெளியிட வேண்டும். இல்லாவிட்டால், கிராமம்தோறும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு எதிர்ப்பு காட்ட திட்டமிட்டுள்ளோம்.

இவ்வாறு, விவசாயிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us