/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
துாய்மை பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கும் நடைமுறையை மாற்றணும்
/
துாய்மை பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கும் நடைமுறையை மாற்றணும்
துாய்மை பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கும் நடைமுறையை மாற்றணும்
துாய்மை பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கும் நடைமுறையை மாற்றணும்
ADDED : ஏப் 10, 2025 10:15 PM
உடுமலை; அரசுப்பள்ளிகளில் நியமிக்கப்பட்டுள்ள துாய்மை பணியாளர்களுக்கு, ஊதியம் வழங்கும் நடைமுறையை மாற்ற வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
அரசுப்பள்ளிகளின் சுகாதாரத்தை மேம்படுத்தவும், துாய்மையான வளாகத்தை பராமரிப்பதற்கும் அந்தந்த உள்ளாட்சி நிர்வாககங்களின் வாயிலாக, துாய்மைப்பணியாளர்கள் நியமிக்கபட்டுள்ளனர்.
அவர்களுக்கான ஊதியம் கிராமங்களில் ஒன்றிய நிர்வாகத்தின் வாயிலாகவும், நகரில் நகராட்சி நிர்வாகத்தின் சார்பிலும் வழங்கப்படுகின்றன.
துவக்கப்பள்ளியில் உள்ள பணியாளர்களுக்கு, 1,300 ரூபாய், நடுநிலைப்பள்ளிகளில் இரண்டாயிரம் ரூபாய் வீதம் வழங்கப்படுகிறது. இந்த தொகை அவர்களின் அன்றாட தேவைக்கு மிகவும் குறைவாக இருப்பினும், அதை பெறுவதிலும் இழுபறி நிலை தொடர்கிறது.
குறைந்தபட்சம் நான்கு மாதங்களுக்கு ஒரு முறையாகவும், அதிகப்பட்சம் 10 மாதங்கள் வரை இப்பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க தாமதம் ஏற்படுகிறது.
பள்ளி மேலாண்மைக்குழுவினர் கூறியதாவது:
அரசுப்பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பு துவங்குவதற்கு முன்பே, இணைய சேவைக்கான தொகையை அரசு தவறாமல் பள்ளிகளுக்கு வழங்குகிறது. ஆனால், பள்ளியின் முக்கிய தேவையாக உள்ள துாய்மைக்கு அக்கறை காட்டுவதில்லை.
துாய்மைப்பணியாளர்களுக்கு ஏற்கனவே மிக குறைவான ஊதியம் வழங்கப்படுகிறது. அதுவும் பல மாதங்களுக்கு ஒருமுறை என்ற நிலை இருப்பதால், பள்ளிகளில் சுகாதாரம் பாதிக்கப்படுகிறது.
இப்பணியாளர்களுக்கு ஊதியம் அதிகரித்து, இழுபறி இல்லாமல் மாதந்தோறும் பெறும் வகையில், நடைமுறையை மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, தெரிவித்தனர்.