தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ மறு நடவு அரச மரம் தழைத்தது

 மறு நடவு அரச மரம் தழைத்தது

 மறு நடவு அரச மரம் தழைத்தது


ADDED : ஜன 24, 2026 04:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 24, 2026 04:38 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அனுப்பர்பாளையம்: அணைப்பாளையம் பகுதியில் தனியார் தோட்டத்தில் இருந்த, 25 ஆண்டு அரச மரத்தை இட தேவைக்காக, கடந்த, மூன்று மாதங்களுக்கு முன், தோட்ட உரிமையாளர் வெட்டி அகற்ற முற்பட்டார். இதையறிந்த அணைப்பாளை யம் மற்றும் காவிலிபாளையம்புதுார் பகுதி பொ துமக்கள் அரச மரத்துக்கு மறு வாழ்வு கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

அதனையொட்டி, திருப்பூர் மெஜஸ்டிக் எக்ஸ்போர்ட் குழும தலைவர் கந்தசாமி மற்றும் அவரது மகள் மனோன்மணி ஆகியோர் முயற்சியுடன் பொக்லைன் இயந்திரம் வாயிலாக, மரத்தை பொதுமக்கள் வேருடன் அகற்றினர் . தொடர்ந்து, காவிலிபாளையம்புதுார் மாநகராட்சி பள்ளி வளாகத்தில் மறு நடவு செய்தனர். மரத்தை பள்ளி மாணவ, மாணவியர் தண்ணீர் ஊற்றி பராமரித்து வருகின்றனர். தற்போது, அரச மரம் துளிர் விட்டு பசுமையுடன் காட்சியளிக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us