/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஒலிக்குது தாள லயம்; 'நம்ம ஊரு' தயாரிக்கும் இசை வாத்தியம்
/
ஒலிக்குது தாள லயம்; 'நம்ம ஊரு' தயாரிக்கும் இசை வாத்தியம்
ஒலிக்குது தாள லயம்; 'நம்ம ஊரு' தயாரிக்கும் இசை வாத்தியம்
ஒலிக்குது தாள லயம்; 'நம்ம ஊரு' தயாரிக்கும் இசை வாத்தியம்
ADDED : பிப் 17, 2024 11:50 PM

'கைம்முரசு' என்றால் நம்மில் பலருக்கு புரிய வாய்ப்பில்லை. அதுவே, 'தபேலா' என்றால், சட்டென புரியும்.
தபேலா இணை இரண்டு பாகங்களால் ஆனது. இடது கையால் வாசிக்கப்படுவது 'பயான்'; வலது கையால் வாசிக்கப்படுவது 'தயான்'. 'பயான்' மண்ணாலோ, செம்பாலோ தயாரிக்கப்படும். 'தயான்' மரத்தால் உருவானது. இரண்டின் மேற்பாகமும் தோலினால் மூடப்பட்டிருக்கும்.
உருளை வடிவான மரத்துண்டுகள் 'தபேலா' இணையில் பொருத்தப்பட்டிருக்கும். இத்துண்டுகளை மேலேயும் கீழேயும் நகர்த்துவதன் மூலம் சுருதியை கூட்டிக் குறைக்கலாம். 'தபேலா' ஒரு அடி முதல் ஒன்றரை அடி வரை நீளம் உள்ளது. 'பயான்' ஒரு அங்குலம் அல்லது இரண்டு அங்குலம் 'தயானை' விடக்குறைவானது ஆகும்.
இந்த இரண்டில், 'பயான்' திருப்பூர், அனுப்பர்பாளையம், 15 வேலம்பாளையம், ஆத்துப்பாளையம் பகுதிகளில் உள்ள பாத்திர உற்பத்தி பட்டறைகளில், உற்பத்தி செய்யப்படுகிறது. வட மாநிலங்களில், 'பயான்' எனப்படுவது, இங்கே 'டக்கா' என்கின்றனர்.
திருப்பூரில் 'டக்கா' உற்பத்திக்கு நல்ல வரவேற்பு உள்ளதால், இதை உருவாக்குவதில், பாத்திர உற்பத்தியாளர்கள் தீவிர ஆர்வம் காட்டி வருகின்றனர். உற்பத்தி செய்யப்படும், 'டக்கா'வை விற்பனையாளர்கள் வாங்கி சென்று அதன் வாய் பகுதியில் தோல் கட்டி இசை வாத்தியமாக உருவாக்கி விற்பனைக்கு அனுப்புகின்றனர்.