/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பயிர்களுக்கு நுண்ணுாட்டம் இட சரியான தருணம்
/
பயிர்களுக்கு நுண்ணுாட்டம் இட சரியான தருணம்
ADDED : டிச 23, 2024 10:17 PM
உடுமலை; மழை பெய்துள்ளதால், பயிர்களுக்கு நுண்ணுாட்டம் இட சரியான தருணம் என, வேளாண்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உடுமலை பகுதிகளில், நல்ல மழை கிடைத்துள்ளதால், இது பயிர்களுக்கு நுண்ணூட்டம் இடுவதற்கு சரியான நேரமாகும். குறிப்பாக தென்னை மரங்களுக்கும், நிலைப்பயிர்களுக்கும் நுண்ணுாட்டம் மிகவும் அத்தியாவசியமானதாகும்.
இந்த நுண்ணுாட்ட உரங்கள், 50 சதவீதம் மானிய விலையில், உடுமலை வேளாண்மை துறை, குறிச்சிக்கோட்டை துணை வேளாண் கிடங்கில் விற்பனைக்கு உள்ளது.
மேலும், சோளவிதைகள், வேப்பெண்ணை மருந்து, உளுந்து விதைகள், உயிர் உரங்கள் ஆகிய அனைத்தும் மானிய விலையில் உள்ளது.
விவசாயிகள் வாங்கி பயன்படுத்திக்கொள்ளுமாறு, வேளாண் உதவி அலுவலர் அமல்ராஜ் தெரிவித்துள்ளார். மேலும் விபரங்களுக்கு, 97512 93606 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.