ADDED : டிச 15, 2025 05:37 AM
அ நிறம் | அளவு
உடுமலை: அமராவதி ஆற்றுப்பாலத்தில், சேதமடைந்துள்ள தடுப்புச்சுவரை சீரமைக்க நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோவை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், மடத்துக்குளம் அருகே அமராவதி ஆற்றுப்பாலம் உள்ளது. இப்பாலத்தின் வழியாக, தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன.
மேலும் இப்பாலத்தில், ஓரங்களிலும், தடுப்புச்சுவரும் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால், விபத்துகள் ஏற்படும் வாய்ப்புள்ளது.
எனவே, இப்பாலத்தில் இவற்றை சரிசெய்வதோடு, பிரதிபலிப்பான், மின் விளக்குகளை பொருத்த நெடுஞ்சாலைத்துறையினரும், மடத்துக்குளம் பேரூராட்சியினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
