/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நிலத்தின் வேர், புவியின் குடலாக திகழும் 'மண் புழு'
/
நிலத்தின் வேர், புவியின் குடலாக திகழும் 'மண் புழு'
நிலத்தின் வேர், புவியின் குடலாக திகழும் 'மண் புழு'
நிலத்தின் வேர், புவியின் குடலாக திகழும் 'மண் புழு'
ADDED : பிப் 16, 2024 12:38 AM

திருப்பூர்;''மண்ணின் மைந்தனாகிய மண்புழு, பல்வேறு நன்மைகளை செய்வதால், நிலத்தின் வேர்கள் என்று போற்றுகிறோம்,'' என, வேளாண் அறிவியல் மைய நிர்வாகி சுதாகர் பேசினார்.
இளம் விவசாயிகளுக்கான திறன் மேம்பாட்டு திட்டத்தில், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகளுக்கு, பொங்கலுார் வேளாண் அறிவியல் நிலையத்தில், பயிற்சி நடந்து வருகிறது. வேளாண் அறிவியல் மைய விஞ்ஞானிகள், விவசாயிகளுக்கு பயிற்சி அளித்து, செயல் விளக்கமும் அளித்து வருகின்றனர்.
நேற்றுமுன்தினம் விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரிப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. வேளாண் அறிவியல் மைய உழவியல் துறை நிர்வாகி சுதாகர், விவசாயி களுக்கு இதுகுறித்து பயிற்சி அளித்தார். இயற்கை உரம் தயாரிக்கும் இடத்துக்கு அழைத்துச்சென்று விளக்கம் அளிக்கப்பட்டது. வேளாண்துறை இணை இயக்குனர் மாரியப்பன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
உழவியல் துறை நிர்வாகி சுதாகர் கூறியதாவது:
மண்ணின் மைந்தனாகிய மண்புழு, பல்வேறு நன்மைகள் செய்வதால், நிலத்தின் வேர்கள், பூமியின் குடல் என்றெல்லாம் போற்றுகிறோம். மற்ற புழுக்களில் இருந்து, மண்புழுவை வேறுபடுத்தி கண்டறிவது முக்கியம். மண்புழுவை பக்குவமாக சேகரித்து, தனியே வளர்த்து, பெருக்கமடைய செய்ய வேண்டும்.
அதிலிருந்து, தரமான இயற்கை உரம் தயாரிக்கலாம். இயற்கை வேளாண்மையில், மண்புழு உரம் என்பது மிகவும் முக்கியமானது. மண்புழு குளியல் நீர், மண்புழு புரதம் ஆகியவையும் தயாரிக்கலாம். குழிமுறை, குவி முறை, தொட்டி முறை என, பல்வேறு வழிமுறைகள் உள்ளன. விவசாயிகளுக்கு, நேரடியாக வயல்வெளிக்கு அழைத்துச்சென்று, செயல் விளக்க பயற்சி அளிக்கப்பட்டது.
இவ்வாறு, அவர் பேசினார்.