/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அறிவியல் கண்காட்சி படைப்புகள் அசத்தல்
/
அறிவியல் கண்காட்சி படைப்புகள் அசத்தல்
ADDED : ஆக 25, 2025 09:17 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை; உடுமலை எஸ்.கே.பி., மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது.
பள்ளி கல்விக்கழக உப தலைவர் ஜெயராமன் கண்காட்சியை துவக்கி வைத்தார். கல்விக்கழக செயலாளர் ராதாகிருஷ்ணன், இணைசெயலாளர் கோபாலன், பள்ளி தலைமையாசிரியர் சுப்ரமணியம் மாணவர்களின் அறிவியல் படைப்புகளை பார்வையிட்டனர்.
பல்வேறு படைப்புகளை மாணவர்கள் காட்சிப்படுத்தினர். சிறந்த மூன்று படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆசிரியர் கவிதா நன்றிதெரிவித்தார்.