/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சீசன் துவங்கியது... பஞ்சு வரத்து அதிகரிப்பு
/
சீசன் துவங்கியது... பஞ்சு வரத்து அதிகரிப்பு
ADDED : நவ 28, 2024 06:09 AM
திருப்பூர்; பருத்தி சீசன் துவங்கிய நிலையில், பஞ்சு வரத்து அதிகரித்துள்ளது.
நடப்பு பருத்தி ஆண்டு (2024அக்., - 2025 செப்.,) கடந்த மாதம் துவங்கியது. கடந்த சீசனில், கடைசி நேரம் வரை பருத்தி வரத்து இருந்து வந்தது. கடந்த மாதம் முதல் வாரத்தில், தினசரி பஞ்சு வரத்து, 12 ஆயிரம் முதல் 20 ஆயிரம் பேல்களாக இருந்தது . (ஒரு பேல் என்பது, 170 கிலோ).
கடந்த மாத இறுதியில், தினசரி வரத்து, ஒரு லட்சம் பேல்களை தாண்டியது. தொடர்ந்து பஞ்சு வரத்து அதிகரித்து வருவதால், இவ்வாரத்தின் தினசரி வரத்து, இரண்டு லட்சம் பேல்களை கடந்துவிட்டது. தமிழகத்தை சேர்ந்த சில நுாற்பாலைகள், பஞ்சு விலை குறைவாக இருக்கும் நிலையில், முதலில் வரும் தரமான பஞ்சை வாங்கி, 25 சதவீதம் இருப்பு வைக்கலாம் என உத்தேசத்துள்ளன.
முதல்கட்டமாக, குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திர மாநிலங்களில் இருந்து அதிக வரத்து துவங்கியுள்ளது. பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் தமிழகத்தில் இருந்து வரத்து மிகவும் குறைவாக இருக்கிறது.
இதுகுறித்து பஞ்சு வியாபாரிகள் கூறுகையில்,'இந்திய பருத்திக்கழகம், இவ்வார இறுதியில் கூடி விவாதிக்க உள்ளது; அதன் பின்னரே, இருப்புநிலை குறிப்பு வெளியிடப்படும். கடந்த ஆண்டுகளை காட்டிலும் பருத்தி சாகுபடி குறைந்துள்ளது. அடுத்த மாதத்தில் இருந்து மூன்று மாதங்களுக்கு பஞ்சு வரத்து அதிகமாக இருக்கும்,' என்றனர்.