/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அன்று துாவிய விதை இன்று விருட்சமானது
/
அன்று துாவிய விதை இன்று விருட்சமானது
ADDED : ஜூலை 27, 2025 08:21 AM
தி ருப்பூர் 'வெற்றி' அறக்கட்டளை சார்பில், நொய்யல் தடுப்பணை மற்றும் குளம் பராமரிப்பு, அரசு பள்ளி உருவாக்கம், மரம் வளர்ப்பு என, பல்வேறு அறப்பணிகள் நடந்து வருகிறது. அவற்றிற்கெல்லாம் சிகரம் வைத்தது போல், 'வனத்துக்குள் திருப்பூர்' என்ற மரம் வளர்ப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் கலாம் நினைவு நாள் அஞ்சலி கூட்டத்தில் துாவிய விதை, 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டக்குழு மூலமாக, பசுமைப்பணி முன்னெடுக்கப்பட்டது. ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் இலக்குடன் துவங்கிய பசுமை பயணம், 10 ஆண்டுகளில், 22 லட்சம் மரக்கன்றுகளை நட்டு முடிக்கப்பட்டுள்ளது. தற்போது 11வது ஆண்டிலும் மரக்கன்றுகள் நடும் பணி முழுவீச்சில் துவங்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி பூங்கா இடுவாய் சின்னக்காளிபாளையத்தில் உள்ள மாநகராட்சியின், 12 ஏக்கர் நிலத்தில், மாநகராட்சி அறிவியல் பூங்கா, அரிய வகை மூங்கில்களுடன் அமைக்கப்பட்டுள்ளது.
சங்க இலக்கிய பூங்கா சங்க இலக்கிய நுால்களில் உள்ள குறிப்புகளில் இருந்து, அரிய வகை மரக்கன்றுகள் கண்டறியப்பட்டன. அவற்றை நட்டு வளர்த்து, சங்க இலக்கிய பூங்கா உருவாக்க திட்டமிடப்பட்டது. திருப்பூர் மாநகராட்சி சந்திராபுரம் பகுதியில், அரிய வகை மரங்கள் நட்டு, சங்ககால பூங்கா பணி நடந்து வருகிறது. மரங்களின் பெயர், தன்மை, இடம்பெற்ற பாடல் குறிப்புகளுடன், கல்வெட்டு அமைக்கவும் திட்டமிட்டுள்ளனர்.
திருப்பூர் சாயக்கழிவு நீரால் மாசுபட்ட, நொய்யலின் குறுக்கே கட்டப்பட்ட ஒரத்துப்பாளையம் அணைக்கும் புத்துயிர் அளிக்கும் திட்டமும் துவங்கியுள்ளது. அணைக்கட்டு பகுதியில், 1000 ஏக்கரில் மரக்கன்று நட்டு, பசுஞ்சோலையாக மாற்றும் திட்டம் வெற்றிகரமாக நடக்கிறது.
கடந்த, 2015ல் துவங்கிய இந்த வெற்றி பயணத்தில், 2024ம் ஆண்டு வரையிலான பத்து திட்டங்களில், 22 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. தற்போது 11வது திட்டமும் வெற்றி நடை போடுகிறது.