/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாணவர்களின் எதிர்காலத்துக்கான 'சக்தி' ஸ்ரீ சக்தி இன்டர்நேஷனல் பள்ளியில் இருக்கு!
/
மாணவர்களின் எதிர்காலத்துக்கான 'சக்தி' ஸ்ரீ சக்தி இன்டர்நேஷனல் பள்ளியில் இருக்கு!
மாணவர்களின் எதிர்காலத்துக்கான 'சக்தி' ஸ்ரீ சக்தி இன்டர்நேஷனல் பள்ளியில் இருக்கு!
மாணவர்களின் எதிர்காலத்துக்கான 'சக்தி' ஸ்ரீ சக்தி இன்டர்நேஷனல் பள்ளியில் இருக்கு!
ADDED : அக் 07, 2024 01:12 AM

''மாணவ, மாணவியர் மத்தியில் வெற்றிக்கான குறிக்கோளை வகுக்க செய்து, அதை எட்டுவதற்கு வழிகாட்டுகிறோம்,'' என்கிறார் ஸ்ரீ சக்தி கல்விக்குழுமங்களின்துணை தலைவர்தீபன் தங்கவேலு.
பள்ளியின் கற்றல் சிறப்பு குறித்து, அவர் மேலும் கூறியதாவது:
கே.ஜி., முதல், பிளஸ் 2 வகுப்பு வரை செயல் வழிக்கற்றல் வாயிலாக பாடங்கள் கற்பிக்கப்படுகிறது. கலை, விளையாட்டு, தற்காப்பு கலை, கல்விசார் திரைப்படம், களப்பயணம் போன்ற நிகழ்ச்சிகளை முன்னெடுத்து வருகிறோம். செயல் முறை பயிற்சியும் வழங்கி வருகிறோம். பள்ளி பருவத்திலேயே தொழில் வளர்ச்சியின் முக்கிய அம்சங்களை மாணவ, மாணவியர் அறிந்துக் கொள்ள செய்கிறோம்.
தேசிய அளவில், அரசின் சார்பில் நடத்தப்படும் தொழில்சார்ந்த போட்டி தேர்வுகளுக்கு மாணவர்களை தயார்படுத்த 'ஆலன் கேரியர் இன்ஸ்டிடியூட்'டுடன் இணைந்து, 6 முதல், பிளஸ் 2 வரை படிக்கும் மாணவ, மாணவியரை ஐஐடி., ஜெஇஇ., நீட், கிளாட், நிட், டாட் போன்ற போட்டி தேர்வுகளுக்கு தயார்படுத்துகிறோம். 9 முதல் முதல், 12ம் வகுப்பு மாணவர்களுக்கு உடல் மற்றும் மனம் சார்ந்த பயிற்சிகளை அளித்து வருகிறோம்; அதன் வாயிலாக அவர்கள் எவ்வித மன அழுத்தமும் இல்லாமல் படிக்கின்றனர்.
வாழ்க்கையில் வெற்றி பெற குறிக்கோள் உருவாக்கி, அந்த குறிக்கோளை அடைய என்னென்ன வழிமுறைகள் பின்பற்ற வேண்டும் என்ற தன்னம்பிக்கையை, மாணவ, மாணவியருக்கு ஏற்படுத்தி வருகிறோம்.
மாணவர்களின் உடல் நலன், உணர்வு, ஆன்மிகம், அறிவுசார் மற்றும் மன வளர்ச்சியில் அதிக கவனம் செலுத்துகிறோம். பேச்சு, விளையாட்டு, அறிவியல் சார்ந்த கலைகளை மாணவர்களுக்கு கற்பித்து வருகிறோம்.
பிற பள்ளிகளில் நடக்கும் விளையாட்டு, இலக்கிய போட்டிகளில் பங்கெடுத்து, பரிசு மற்றும் கோப்பைகளை எம் பள்ளி மாணவ, மாணவியர் அள்ளி வருகின்றனர். 'அக்னி சிறகுகள்' என்ற தலைப்பில், மாணவர்களுக்கு அறிவியல் சார்ந்த கண்டுபிடிப்புகளை ஊக்குவித்து வருகிறோம்.
பள்ளி, இயற்கை சூழலில் எவ்வித காற்று மாசு, ஒலி மாசுமின்றி அமைதியான சூழலில், 25 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கிறது. சூலுார், சித்ரா, பல்லடம், அவிநாசி, பெருமாநல்லுார் உள்ளிட்ட அனைத்து பகுதிகளுக்கும் பாதுகாப்பான பஸ் வசதி வழங்குகிறோம்.
நம் நாட்டின் மக்கள் தொகையில் 65 சதவீதம், 35 வயதுக்கு உட்பட்டவர்கள். இளைஞர்கள் தேடும் எதிர்கால வாய்ப்புகளில், பொதுவாகவே போட்டி நிறைந்திருக்கும். அரசு நடத்தும், தேசிய அளவிலான போட்டி தேர்வில் வெற்றி பெற பள்ளி மாணவர்களுக்கு முழுமையான புரிதலுடன் கூடிய கல்வி தேவைப்படுகிறது.
நாட்டில் தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு, மணவர்கள் தங்களின பங்களிப்பை வழங்கும் வேண்டும். இதுபோன்ற சிந்தனையை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்தும் வகையில் கல்வி வழங்குகிறோம்.
இவ்வாறு, அவர் கூறினார்.