/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தெருநாய் கட்டுப்படுத்துவதில் சேவை மனப்பான்மை மாயம்
/
தெருநாய் கட்டுப்படுத்துவதில் சேவை மனப்பான்மை மாயம்
தெருநாய் கட்டுப்படுத்துவதில் சேவை மனப்பான்மை மாயம்
தெருநாய் கட்டுப்படுத்துவதில் சேவை மனப்பான்மை மாயம்
ADDED : ஜூலை 04, 2025 11:13 PM
திருப்பூர்; திருப்பூர் மாநகராட்சி மேயர், கமிஷனரிடம், எதிர்க்கட்சி தலைவர் அன்பகம் திருப்பதி (அ.தி.மு.க.,), அளித்த மனு:
தெரு நாய்களை பிடித்து, உரிய தடுப்பூசி செலுத்தி, கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய, மாநகராட்சி நிர்வாகம், தங்கம் மெமோரியல் டிரஸ்ட் நிர்வாகம் ஒப்பந்தம் செய்துள்ளது. இருப்பினும், தங்கம் மெமோரியல் டிரஸ்ட் தரப்பில், தெருநாய் தொல்லை குறித்து புகார் அளித்தாலும் கண்டுகொள்வதில்லை.
கவுன்சிலர்கள் கேட்கும் போது, 'எங்களுக்கு பில் தொகை பாக்கி உள்ளது; நிலுவை தொகையை எங்களுக்கு வாங்கி கொடுக்க முயற்சி எடுங்கள்; பிறகு பார்க்கலாம்' என்று தெரிவிக்கின்றனர்.
தெருநாய்களை பிடிக்க சிரமம் இருப்பதாக, வேதனையுடன் கூறுகின்றனர். கவுன்சிலர்கள் மட்டுமல்லாது, சுகாதார ஆய்வாளர் சுகாதார மேற்பார்வையாளரிடமும் அலட்சியமாக பதில் அளித்து, ஒப்பந்தம் செய்துள்ள பணியை செய்யாமல் தட்டிக்கழிக்கின்றனர்.
சட்டத்துக்கு உட்பட்டு, தெருநாய்களை கட்டுப்படுத்த மேற்கொண்ட நடவடிக்கை குறித்து தெரியப்படுத்த வேண்டும். தடுப்பூசி செலுத்திய விவரம், தெருநாய் பராமரிப்பு விவரங்களை, வார்டு சுகாதார மேற்பார்வையாளர் மற்றும் கவுன்சிலர்களிடம் தெரிவித்து, ஒப்புதல் பெறும் வகையில், புதிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
வரும் மாமன்ற கூட்டத்துக்கு, தங்கம் மெமோரியல் டிரஸ்ட் நிர்வாகத்தை சேர்ந்த பொறுப்பாளர்களையும் பங்கேற்க செய்து, கவுன்சிலர்களின் குறைகளை நேரில் கேட்டு ஆவன செய்ய வேண்டும்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.