/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சாப்பிட்டபோது பாய்ந்த குண்டு; நண்பன் உயிர் பறித்த கொடூரம்
/
சாப்பிட்டபோது பாய்ந்த குண்டு; நண்பன் உயிர் பறித்த கொடூரம்
சாப்பிட்டபோது பாய்ந்த குண்டு; நண்பன் உயிர் பறித்த கொடூரம்
சாப்பிட்டபோது பாய்ந்த குண்டு; நண்பன் உயிர் பறித்த கொடூரம்
ADDED : நவ 03, 2024 11:22 PM

கடந்த 1988 முதல் 2003 வரை ராணுவத்தில் பணிபுரிந்தேன். கூர்க்கா படைப்பிரிவில் லே லடாக் (ஜம்மு), நாது லா 17 மைல் (சிக்கிம் - சீன எல்லை) உள்ளிட்ட பகுதிகளில் பணிபுரிந்தேன். இரவு நேர ரோந்துப்பணியில் ஈடுபட்டுவந்தேன். அப்போது குண்டுகள் பாய்ந்துகொண்டே இருக்கும். கண்ணிவெடிகளும் இருக்கும். தொழில்நுட்பப்பிரிவினர் முன் சென்றபின் தான் நாங்கள் செல்வோம்.
குண்டு மழையாகப் பொழிந்தபோது, என் முன்பு நின்றுகொண்டிருந்தவர்கள் மீது குண்டு பாய்ந்தது. நாங்கள் ஒட்டுமொத்தமாக பதுங்குகுழியில் சரிந்தோம்.
இதில் எனது முதுகெலும்பு உடைந்தது. மூன்று ஆண்டுகள் சிகிச்சையில் இருந்தேன்.
ஜம்முவில் ரஜோரி என்ற இடத்தில் பணிபுரிந்தபோது, நண்பர்கள் மூவர், ஒரே தட்டில், சாப்பிட்டுக்கொண்டிருந்தோம். திடீரென எதிரில் அமர்ந்த நண்பரின் நெஞ்சில் குண்டு பாய்ந்தது. ரத்தம் தட்டில் விழுந்தது. குண்டடி பட்டவர், குண்டு யார் மீது விழுந்தது என்று எங்களிடம் கேட்டார். அப்போதுதான் தெரிந்தது; கேட்டவரின் நெஞ்சில்தான் குண்டு பாய்ந்தது என்று.
அங்கிருந்து 9 கி.மீ., துாரம் மருத்துவமனைக்கு அவரை அழைத்துச்செல்ல வேண்டியிருந்தது. அதற்குள் அவர் இறந்துவிட்டார். என் நெஞ்சில் மறக்க முடியாத சம்பவமாக இது அமைந்தது.
தற்போது, வீரபாண்டியில் வசிக்கிறோம்; சமையல் எரிவாயு ஏஜன்சி நடத்துகிறார். ராணுவ வீரர்களின் பெருமையை ஒவ்வொருவரும் உணர்ந்து கொண்டால், தேசத்தின் மீது நாம் கொண்டுள்ள பற்று அதிகரிக்கும்.