/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இ-பைலிங் கட்டாயம் ;போராட்டம் தொடரும்
/
இ-பைலிங் கட்டாயம் ;போராட்டம் தொடரும்
ADDED : டிச 24, 2025 06:26 AM
திருப்பூர்: கோர்ட் வழக்கு நடவடிக்கையில் இ-பைலிங் முறையை பின்பற்ற உரிய கட்டமைப்பு ஏற்படுத்த வேண்டும், என வலியுறுத்தி, ஜன. 7ல் சென்னையில் ஐகோர்ட் முற்றுகையிட்டு போராட்டம் நடத்த வக்கீல் சங்க கூட்டுக் கமிட்டி முடிவு செய்துள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வக்கீல் சங்கங்களின் கூட்டுக்குழு கூட்டம், சமீபத்தில் மதுரையில் நடந்தது. அதில், இ-பைலிங் கட்டாயம் என்ற ஐகோர்ட் உத்தரவை நிறுத்தி வைக்க வேண்டும். வக்கீல்கள், வழக்குதாரர்கள் தாக்கல் செய்யும் ஆவணங்களை கோர்ட்டே, ஸ்கேனிங் செய்து இணையத்தில் பதிவேற்ற வேண்டும்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜன. 7ம் தேதி சென்னை ஐகோர்ட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என முடிவு செய்யப்பட்டது. போராட்டத்தில் மாநில வக்கீல் குமாஸ்தா சங்கத்தினர் பங்கேற்பதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், இ-பைலிங் நடைமுறைக்கு நான்கு நாள் அறிவித்துள்ள பயிற்சி வகுப்புகளையும் புறக்கணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கூட்டுக்கமிட்டியின் இந்த அழைப்பை ஏற்று செயல்பட திருப்பூர் வக்கீல்கள் முடிவு செய்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்திலிருந்து திரளாக இந்தமுற்றுகை போராட்டத்தில் கலந்து கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. போராட்டத்தில் பங்கேற்குமாறு அனைத்து உறுப்பினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, அதற்கான முன்னேற்பாடுகள் குறித்து திருப்பூர் வக்கீல்கள் ஆலோசனை செய்து வருகின்றனர்.

