/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மகளிர் உரிமைத்தொகைக்காக போராட்டம் பண்ணைக்கிணறு மக்கள் ஆவேசம்
/
மகளிர் உரிமைத்தொகைக்காக போராட்டம் பண்ணைக்கிணறு மக்கள் ஆவேசம்
மகளிர் உரிமைத்தொகைக்காக போராட்டம் பண்ணைக்கிணறு மக்கள் ஆவேசம்
மகளிர் உரிமைத்தொகைக்காக போராட்டம் பண்ணைக்கிணறு மக்கள் ஆவேசம்
ADDED : ஜன 29, 2024 11:31 PM

உடுமலை:குடிமங்கலம் ஒன்றியம், பண்ணைக்கிணறு ஊராட்சியில், பண்ணைக்கிணறு, முக்கூடுஜல்லிபட்டி மற்றும் கோழிக்குட்டை கிராமங்கள் உள்ளன.
இக்கிராமங்களைச்சேர்ந்த, 50க்கும் மேற்பட்ட பெண்கள், நேற்று உடுமலை தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்கள் கூறியதாவது: எங்கள் ஊராட்சிக்குட்பட்ட கிராமத்திலுள்ள, பெரும்பாலான பெண்களுக்கு, அரசின் மகளிர் உரிமைத்தொகை கிடைக்கவில்லை. முறையாக விண்ணப்பித்தும், மேல் முறையீடு செய்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை.
ஆனால், வசதியுள்ள நபர்களுக்கு உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. ஊராட்சி பிரதிநிதிகளும், கிராம உதவியாளரும், உரிமைத்தொகைக்கான பரிந்துரையில் பாரபட்சம் காட்டுகின்றனர்.
இதனால், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு உரிமைத்தொகை கிடைக்காமல், பாதிக்கப்பட்டு வருகின்றனர். விவசாய கூலி தொழிலாளர்கள் பலருக்கும் உரிமைத்தொகை கிடைக்கவில்லை.
இது குறித்து விளக்கம் கேட்டாலும், அதிகாரிகள் முறையாக பதில் அளிப்பதில்லை. இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க, வருவாய்த்துறை உயர் அதிகாரிகள் நேரடியாக கள ஆய்வு செய்து தகுதியான நபர்களுக்கு உரிமைத்தொகை கிடைக்க செய்ய வேண்டும்.
விதிகளை மீறி பயனாளிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டவர்களை பட்டியலில் இருந்து நீக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதில், தி.மு.க., குடிமங்கலம் மேற்கு ஒன்றிய துணை செயலாளர் லோகநாயகி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். தொடர்ந்து, தாலுகா அலுவலகத்தில், மனு கொடுத்து விட்டு திரும்பி சென்றனர்.