/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மூலனுார் பாரதி வித்யாலயா மாணவ, மாணவியர் அபாரம்
/
மூலனுார் பாரதி வித்யாலயா மாணவ, மாணவியர் அபாரம்
ADDED : மே 18, 2025 12:48 AM

திருப்பூர் : பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், மூலனுார் பாரதி வித்யாலயா மெட்ரிக் பள்ளி மாணவர் ஆதவஜோதி, 496 மதிப்பெண்களுடன் வட்டார அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.
அந்த மாணவர், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களில் சென்டம் அடித்துள்ளார். 494 மதிப்பெண்களுடன், கணிதத்தில் சென்டம் பெற்றுள்ள மாணவி ஸ்ரீமதி, இரண்டாமிடம்; 493 மதிப்பெண்களுடன், அறிவியலில் சென்டம் பெற்றுள்ள மாணவி பிரீத்திகா மூன்றாமிடமும் பிடித்துள்ளனர். இப்பள்ளியில் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேர்வு எழுதிய, 93 மாணவர்களில், 5 பேர், 490க்கு மேல்; 10 பேர், 480க்கு மேல்; 22 பேர், 470க்கு மேல்; 35 பேர், 450க்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர். 36 மாணவர்கள், 90 சதவீதத்துக்கும் அதிகமான மதிப்பெண் பெற்றுள்ளனர். மூன்று பாடங்களில் 1 மாணவர்; இரண்டு பாடங்களில் 1 மாணவர்; ஒரு பாடத்தில் மட்டும் 7 பேர் நுாறு மதிப்பெண் பெற்றுள்ளனர். கணிதம் - 5, அறிவியல் - 3, சமூக அறிவியல் - 4 பேர், நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் பெற்றுள்ளனர். தேர்வில் சாதித்த வெற்றிபெற்ற மாணவ, மாணவியரை, மூலனுார் பாரதி வித்யாலயா மெட்ரிக் பள்ளி தாளாளர் செல்லமுத்து, செயலாளர் கிருஷ்ணகுமார், பள்ளி முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஏ.பழனிச்சாமி ஆகியோர் பாராட்டினர்.