/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
எறிபந்து போட்டியில் தெறிக்க விட்ட அணி
/
எறிபந்து போட்டியில் தெறிக்க விட்ட அணி
ADDED : ஜூலை 23, 2025 11:28 PM

திருப்பூர்; திருப்பூர் தெற்கு குறுமைய அளவிலான, அனைத்து பிரிவு மாணவர்களுக்கான எறிபந்து (த்ரோபால்) போட்டி, விஜயாபுரம், புண்ணியவதி சாலையிலுள்ள கிட்ஸ் கிளப் சி.பி.எஸ்.இ., சீனியர் செண்டரி பள்ளியில் நடந்தது.
போட்டிகளை, கிட்ஸ் கிளப் பள்ளி குழுமங்களின் தலைவர் மோகன் கார்த்திக், பள்ளி முதல்வர் தீபாவதி, மெட்ரிக் பள்ளி முதல்வர் செந்தில்குமார் ஆகியோர் துவக்கி வைத்தனர். சர்க்கார் பெரியபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் ராஜ்குமார், சசிகுமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்.
இதில், 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில், 6 அணிகள் பங்கேற்றன. இதில், பிரைட் பப்ளிக் பள்ளி அணி, 2 - 1 என்ற செட் கணக்கில் கிட்ஸ் கிளப் பள்ளி அணியை வென்றது. 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில், 7 அணிகள் பங்கேற்றன. இதில், கிட்ஸ் கிளப் பள்ளி அணி, 2-0 என்ற செட் கணக்கில் செயின்ட் ஜோசப் பள்ளி அணியை வென்றது. மேலும், 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில், 7 அணிகள் பங்கேற்றன. இதில், கிட்ஸ் கிளப் பள்ளி அணி, 2-0 என்ற செட் கணக்கில் செயின்ட் ஜோசப் பள்ளி அணியை வென்றது. குறுமைய இணை செயலாளர் தமிழ்வாணி மேற்பார்வையில் போட்டி நடத்தப்பட்டது. போட்டியின் நடுவர்களாக, ஆனந்தன், ஜம்பு, ஷ்யாம் சகாயராஜ், மணிவண்ணன், சண்முகநதி, சுந்தரமூர்த்தி, மவுலிதரன், ராமகிருஷ்ணன் ஆகியோர் செயல்பட்டனர்.