/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பின்னலாடை தொழிலை 'ஆளப்போகும்' தொழில்நுட்பம்!
/
பின்னலாடை தொழிலை 'ஆளப்போகும்' தொழில்நுட்பம்!
ADDED : ஜூலை 05, 2025 11:51 PM

திருப்பூர் : 'ஏஐ', 'பிளாக்செயின்', 'டார்க் பேக்டரி' போன்ற தொழில்நுட்பங்களை பின்தொடர துவங்கிய 'டாலர் சிட்டி', அடுத்த கட்ட மாற்றத்திற்கு தயாராகி வருகிறது. நவீன வளர்ச்சிக்கான தொழில்நுட்பங்கள் அருகே வந்து விட்டதாக, தொழில்நுட்ப ஆலோசகர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
அவ்வாறான புதிய தொழில் நுட்பங்கள் குறித்து பார்க்கலாம்...
'டிஜிட்டல் ட்வின்'
தொழில்நகரம் என அறியப்படும் திருப்பூர், ஆயத்த ஆடை உற்பத்தியில், இந்தியாவின் இதயமாக விளங்குகிறது. உற்பத்திக்கு முந்தைய, முழுமையான செயல்முறையை 'டிஜிட்டல்' வடிவத்தில் உருவாக்கி, தவறுகளை குறைத்து, நேரத்தைச் சேமிக்கலாம். 'டிஜிட்டல் ட்வின்' தொழில்நுட்பம் இது வரை வாகனத் துறை உள்ளிட்ட சில துறைகளில் மட்டும் இருந்தது. இனி, ஆயத்த ஆடை தயாரிப்பிலும் நுழைய வாய்ப்பு உள்ளது.
உயிரியல் ரீதியான துணி
கிழங்கு தண்டு, ஆரஞ்சு தோல், பசுமை மட்டைகள், கீரைகள், போன்றவற்றில் இருந்து நுாலிழை உருவாக்கும் முயற்சி உலகம் முழுவதும் பரவி வருகிறது. திருப்பூரின் சூழலியல் மையப்படுத்தப்பட்ட பிராண்டுகள் இதில் முதலிடம் வகிக்க முடியும்.
சுழற்சி இல்லா உற்பத்தி
'3டி' பின்னும் இயந்திரங்கள் துணியை வெட்டாமல், நேரடியாக தயாரிப்பதன் மூலமாக, துணி கழிவு உருவாக்கம் தவிர்க்கிறது.
'மைக்ரோ பேக்டரி'
தற்போதைய காலகட்டத்தில், பெரிய அளவிலான உற்பத்தியை காட்டிலும், குறுகிய நேரத்தில், குறிப்பிட்ட அளவில் உருவாக்கும், 'மைக்ரோ' பேக்டரிகள் பிரபலமாகின்றன. இது மாணவர்களும், கிராமத் தொழிலாளர்களும் நேரடியாக இணைந்து வேலை செய்யும் சூழலை உருவாக்கும்.
'நானோ' பூச்சு துணி
மிகவும் மென்மையான 'நானோ' பூச்சுகள், துணிகளை தானாகவே சுத்தமாக்கக்கூடியவை; பாக்டீரியாக்களைத் தடுப்பவை. இது மருத்துவம், ராணுவம், பள்ளி மாணவர்களின் தினசரி உபயோகத்திற்கு மிகவும் ஏற்றது.
'டிஜிட்டல் ஐ.டி.,'
ஒவ்வொரு துணிக்கும் தனித்துவமான 'க்யூ.ஆர்., கோடு மூலம், அதன் மூலத்தொகை, உற்பத்தி இடம், தொழிலாளரின் வேலைநிலை போன்றவை தெரியப்படுத்த வேண்டும் என்பது ஐரோப்பியாவின் விதிமுறை; திருப்பூர் இந்த தரநிலைகளுக்கு முன்னோடி நகரமாக முன்னிலையல் இருக்கிறது. உண்மையான மாதிரிகளை அனுப்பாமல், வாடிக்கையாளர் '3டி' வடிவத்தில் ஆன்லைனில் பார்த்து தேர்வு செய்யக்கூடிய சூழல் - இது வர்த்தக செலவுகளை குறைக்கும், சுற்றுச்சூழலை காக்கும்.
கழிவு மூலம் எரிசக்தி
தோல், நீர், கழிவுகளை முறையாக பராமரித்து மீண்டும், மறு பயன்பாட்டுக்கு கொண்டு வரும் தொழில்நுட்பங்கள் அவசியம். வரும், 2030ல் வெற்றிக்கான, திருப்பூரின் தாரக மந்திரமாக மாறியுள்ளது.
மாற்றம் உருவாகும்...
பனியன் தொழிலில், புதிய தொழில்நுட்பங்களை படிப்படியாக செயல்படுத்த வேண்டும். பனியன் தொழிலின் தலைமையிடமாக திகழும் திருப்பூர் உற்பத்தியாளர்கள், இனி வெறும் உற்பத்தியாளர் அல்ல; அதுவே உயரிய தொழில்நுட்பம், நிரந்தர வளர்ச்சி, மாணவர் சக்தி ஆகியவற்றின் மையமாக மாறப்போகிறது. இத்தகைய மாற்றம் உருவாகும் காலகட்டத்தில், நாமும் உடன் பயணித்து, உலக அளவிலான பின்னல் துணி நகரமாக திருப்பூரை உயர்த்த கரம் கொடுக்கலாம்.
- ஜெய்பிரகாஷ்
'ஸ்டார்ட் அப் இந்தியா' திட்ட
வழிகாட்டி ஆலோசகர்