நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அனுப்பர்பாளையம்: தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவர் வரதராஜன், 35; திருப்பூர், 15 வேலம் பாளையம் அடுத்த சோளிபாளையத்தில் தங்கி பனியன் நிறுவனத்தின் பணியாற்றி வந்தார். நேற்று காலை வழக்கம் போல் பைக்கில் வேலைக்கு சென்றார்.
வேலம்பாளையம் அருகே சென்ற போது, முன்னால் சென்ற தண்ணீர் லாரியை முந்த முயன்றார். அப்போது, ரோட்டோரம் கிடந்த மணலில் பைக் சறுக்கி கீழே விழுந்தார். அவர் மீது லாரியில் சிக்கி இறந்தார். 15 வேலம்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.