/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தொழில் அமைப்புகள் இணைந்து லோக்சபா தேர்தலில் களமிறங்கும் மின் கட்டண விவகாரத்தில் டீமா சங்கம் அதிரடி
/
தொழில் அமைப்புகள் இணைந்து லோக்சபா தேர்தலில் களமிறங்கும் மின் கட்டண விவகாரத்தில் டீமா சங்கம் அதிரடி
தொழில் அமைப்புகள் இணைந்து லோக்சபா தேர்தலில் களமிறங்கும் மின் கட்டண விவகாரத்தில் டீமா சங்கம் அதிரடி
தொழில் அமைப்புகள் இணைந்து லோக்சபா தேர்தலில் களமிறங்கும் மின் கட்டண விவகாரத்தில் டீமா சங்கம் அதிரடி
ADDED : பிப் 15, 2024 09:07 PM

திருப்பூர்:“மின் கட்டண உயர்வை குறைக்காவிட்டால், 450 தொழில் அமைப்புகள் ஒருங்கிணைந்து தேர்தல் களத்தில் இறங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது,” என, திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்கமான டீமா தலைவர் முத்துரத்தினம் கூறினார்.
தமிழக அரசு, மின் கட்டணங்களை பல மடங்கு உயர்த்தியதால், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக, குறு, சிறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக, தொழில்துறையினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
தமிழக அளவில், தொழில்துறையினர் இணைந்து, தமிழ்நாடு தொழில்துறை மின்நுகர்வோர் கூட்டமைப்பை உருவாக்கி, போராடி வருகின்றனர்.
இதுவரை, எட்டு கட்ட போராட்டம் நடந்து முடிந்துள்ளது. தமிழக அரசு, சில கோரிக்கையை மட்டும் பரிசீலித்துள்ளது. முக்கியமாக, உச்சநேர மின் பயன்பாட்டு கட்டணம் அடியோடு ரத்து செய்யப்பட வேண்டும்; மின் நிலை கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும் என்ற முக்கிய கோரிக்கைகள் நிலுவையில் உள்ளன.
திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கமான டீமா தலைவர் முத்துரத்தினம் கூறியதாவது:
ஒன்பதாவது கட்ட போராட்டம் தொழில்துறைக்கு நல்ல மாற்றத்தை உருவாக்கும் அறிவிப்பாக இருக்கும். முடங்கியுள்ள குறு, சிறு தொழில்களை மீட்டெடுக்க வேண்டுமென போராடி வருகிறோம்.
தமிழக அரசிடம் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளோம். இதுதொடர்பான அறிவிப்பு, பட்ஜெட்டில் இருக்குமென எதிர்பார்க்கிறோம். இல்லாவிட்டால், தேர்தல் களத்தில் போராட்டத்தை துவக்குவோம்.
தமிழக அளவில், 450 தொழில் அமைப்புகள் ஒருங்கிணைந்து, தேர்தல் களத்தில் இறங்குவது குறித்து ஆலோசித்து வருகிறோம். 2011ல், கவன ஈர்ப்புக்காக, 1,000 பேர் போட்டியிடும் போராட்டம் திருப்பூரில் நடந்தது.
கோரிக்கை நிறைவேறாவிட்டால், வரும் லோக்சபா தேர்தலில், எங்கள் நுாதன போராட்டம் இருக்கும். பட்ஜெட்டுக்கு பிறகு, அறிவிப்பை வெளியிடுவோம்.
புதிய அறிவிப்பு என்பது, குறு, சிறு தொழில்களுக்கு நல்ல மாற்றத்தை கொடுக்கும் அறிவிப்பாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.