தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ பதற்றமான ஓட்டுச்சாவடி விவரம் சேகரிப்பு பணி

 பதற்றமான ஓட்டுச்சாவடி விவரம் சேகரிப்பு பணி

 பதற்றமான ஓட்டுச்சாவடி விவரம் சேகரிப்பு பணி


ADDED : மார் 19, 2026 05:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 19, 2026 05:03 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்பூர்: சட்டசபை தொகுதி வாரியாக, பதற்றமான ஓட்டுச்சாவடிகளை இறுதி செய்வதற்கான பணிகள் துவங்கியுள்ளன.

சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் கமிஷன் வழிகாட்டுதலின்படி, அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. ஒரு பிரிவினர், ஓட்டுச்சாவடிகளை தயார்படுத்தும் பணியில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

குறிப்பாக, மண்டல தேர்தல் அலுவலர்கள் மற்றும் போலீசார், ஓட்டுச்சாவடிகளை ஆய்வு செய்து, அறிக்கை அளித்து வருகின்றனர்.

தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாக, முதல்கட்ட ஆய்வு முடிந்து, ஒட்டுமொத்த அறிக்கை அளித்துள்ளனர். இந்நிலையில், பதற்றமான ஓட்டுச்சாவடி, மிகவும் பதற்றமான சாவடிகள் என்ற விவரங்களை, தனித்தனியே சமர்ப்பிக்க தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, தொகுதி வாரியாக, மண்டல தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் நடந்து வருகிறது. திருப்பூர் வடக்கு தொகுதிக்கு உட்பட்ட மண்டல தேர்தல் அலுவலர்களுக்கு, ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நேற்று வழிகாட்டுதல் வழங்கப்பட்டது.

மண்டல அலுவலர்கள் மண்டல தேர்தல் அலுவலர்கள், தங்களது எல்லையில் உள்ள ஓட்டுச்சாவடி விவரங்களை விசாரிக்க வேண்டும். அடிப்படை வசதிகள் முழுமையாக இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.

இல்லாதபட்சத்தில், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் வாயிலாக அவற்றை நிவர்த்தி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக, முந்தைய தேர்தல்களில் நடந்த பதற்றான சூழ்நிலைகளை ஆராய்ந்து, தனித்தனி படிவங்களில் பூர்த்தி செய்து கொடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதற்கு பின்னரே தொகுதியில் உள்ள பதற்றமான ஓட்டுச்சாவடிகள் இறுதி செய்யப்பட்டு, கூடுதல் பாதுகாப்பு, வீடியோ பதிவு ஏற்பாடுகள் செய்யப்படுமென, தேர்தல் பிரிவு அலுவலர்கள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us