நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை: உடுமலை வரலாற்று ஆய்வு நடுவம் சார்பில், திருவள்ளுவர் திருக்கோட்டத்தின் 25ம் ஆண்டு விழா, தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற விஜயலட்சுமிக்கு பாராட்டு விழா என, முப்பெரும் நடந்தது. தமிழ் இணையக்கல்விக்கழகம் நெறியாளர் செந்தலை கவுதமன், சொற்பொழிவாளர் ஆண்டாள் பிரியதர்ஷினி, எம்.பி., ஈஸ்வரசாமி, முன்னாள் எம்.எல்.ஏ., ஜெயராமகிருஷ்ணன், நகராட்சி தலைவர் மத்தீன் பரிசு வழங்கினர்.
ஒன்றியங்களிலுள்ள அரசு பள்ளிகளில், 10 மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வில், தமிழ் பாடத்தில் முதலிடம் பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
திருக்குறள் கலை, இலக்கிய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, பரிசுகளும், சோழமாதேவி, தளி, ஜல்லிபட்டி அரசு மேல்நிலைப்பள்ளிகளுக்கு திருவள்ளுவர் சிலையும் வழங்கப்பட்டது

