/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
டவுன்ஹால் பார்க்கிங் வளாகம் பயன்பாட்டுக்கு வருகிறது
/
டவுன்ஹால் பார்க்கிங் வளாகம் பயன்பாட்டுக்கு வருகிறது
டவுன்ஹால் பார்க்கிங் வளாகம் பயன்பாட்டுக்கு வருகிறது
டவுன்ஹால் பார்க்கிங் வளாகம் பயன்பாட்டுக்கு வருகிறது
ADDED : அக் 23, 2024 11:36 PM
திருப்பூர்: திருப்பூர், குமரன் ரோடு, பழைய டவுன்ஹால் இடிக்கப்பட்டு, மாநகராட்சி மூலம் புதிதாக கட்டமைப்பு செய்யப்பட்டு, மாநாட்டு மைய வளாகம் என பெயரிடப்பட்டது. திறப்பு விழா கண்டும் பயன்பாட்டுக்கு வராமல் இருந்த வளாகத்தை, தீபாவளி பண்டிகை நெரிசலை தவிர்ப்பதன் ஒரு பகுதியாக, தற்காலிகமாக பயன்பாட்டுக்கு கொண்டு வர மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
மாநகராட்சி கமிஷனர் (பொறுப்பு) சுல்தானா அறிக்கை:
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் அதிகளவில் கடைவீதிகளுக்கு செல்ல வாகனங்களை ரோட்டோரத்தில் நிறுத்துவதால், கூட்ட நெரிசல் மற்றும் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. வாகன ஓட்டிகள் நலன் கருதி, குமரன் ரோடு, மாநாடு மைய வளாகத்தில் தனியாக கட்டப்பட்டுள்ள தரை மற்றும் நான்கு தளங்களில் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்த தற்காலிக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மூன்று மணி நேரம் ஒரு டூவீலர் நிறுத்த, 25 ரூபாய்; கார் நிறுத்த, 100 ரூபாய். மூன்று மணி நேரத்துக்கும் மேல் ஒவ்வொரு ஒரு மணி நேரத்துக்கும் டூவீலருக்கு, பத்து ரூபாய், கார்களுக்கு, 25 ரூபாய் வசூலிக்கப்படும். காலை 9:00 முதல் இரவு, 10:00 மணி வரை வாகனம் நிறுத்திக் கொள்ளலாம். இரவு, 10:00 மணிக்கு மேல் வாகனம் நிறுத்த அனுமதியில்லை. நிறுத்தப்பட்ட வாகனங்கள் இரவு, 11:00 மணி வரை மட்டுமே எடுக்க அனுமதிக்கப்படும்.