/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'தடை' தாண்டும் மக்கள்; ஆபத்து உணராத அவலம்
/
'தடை' தாண்டும் மக்கள்; ஆபத்து உணராத அவலம்
ADDED : மார் 26, 2025 11:37 PM

திருப்பூர்; திருப்பூர், அவிநாசி ரோடு, புஷ்பா ரவுண்டானாவில், இருபுறமும் பஸ் ஸ்டாப் உள்ளது. 'பீக்ஹவர்ஸ்' மட்டுமின்றி, எந்நேரமும், இந்த சந்திப்பு மற்றும் ரவுண்டானாவில் தொடர் போக்குவரத்து நெரிசல், வாகன நெருக்கடி நிலவுகிறது.
பாதசாரிகள், பொதுமக்கள் சாலையை கடக்கும் போது விபத்துகள் ஏற்படுவதை தவிர்க்க, உயர்மட்ட நடைபாலம் மாநகராட்சி மூலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தை மக்கள் பயன்படுத்தாமல், சிறிய சந்து கிடைத்தாலும், அதன் வழியாக பயணித்து வந்தனர். விபத்து அபாயம் உருவானது.
இதனால், போக்குவரத்து போலீசார் சிறிதும் இடைவெளியின்றி 'பேரிகார்டு' வைத்து தடுப்பு ஏற்படுத்தினர். ஆனால், அதனை தாண்டி குதித்து, பொதுமக்கள் வருகின்றனர். தடுமாறி இவர்கள் ரோட்டில் விழுந்து விட்டால், அல்லது வேகமாக வாகனம் வரும் போது சாலையை திடீரென கடக்க முற்பட்டால், விபத்து ஏற்படும்.
போலீசார் விபத்து ஏற்படக்கூடாது என்பதற்கு தான் 'பேரிகார்டு' வைக்கின்றனர். ஆனால், அதனை தாண்டி விதிமீறுவோரை கண்காணித்து, போலீசார் கண்டிக்க வேண்டும்.