/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குடியிருப்புக்குள் புகுந்த வேன்; பொதுமக்கள் சாலை மறியல்
/
குடியிருப்புக்குள் புகுந்த வேன்; பொதுமக்கள் சாலை மறியல்
குடியிருப்புக்குள் புகுந்த வேன்; பொதுமக்கள் சாலை மறியல்
குடியிருப்புக்குள் புகுந்த வேன்; பொதுமக்கள் சாலை மறியல்
ADDED : ஜன 20, 2024 02:33 AM
பல்லடம்;பல்லடம் அருகே அறிவொளி நகரில் இருந்து பனியன் கம்பெனி வேன் ஒன்று, தொழிலாளருடன் திருப்பூர் நோக்கி சென்றது.
ஆறுமுத்தாம்பாளையம் அருகே கட்டுப்பாட்டை இழந்து ஒரு வீட்டை சேதப்படுத்தி அருகிலுள்ள பள்ளத்தில் நின்றது. வேன் டிரைவரின் கால் எலும்பு முறிந்தது. தொழிலாளர்கள் காயமின்றி தப்பினர். விபத்து நடந்த இடத்தில், பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து, அப்பகுதியினர் கூறியதாவது:
ஆறுமுத்தாம்பாளையம் பகுதியில் இருந்து ஏராளமான பனியன் தொழிலாளர்கள், பள்ளி குழந்தைகளை ஏற்றியபடி தனியார் பஸ்கள், வேன்கள் திருப்பூர், பல்லடம் செல்கின்றன. இந்த ரோட்டில், வாகன போக்குவரத்து அதிகம்.
ரோடு, 30 அடியுடன் மிகவும் குறுகலாக உள்ளன. குறுகலாக உள்ள இந்த ரோட்டில் நான்கு சக்கர வாகனங்கள் எதிரெதிரே வரும்போது விபத்து அபாயம் ஏற்படுகிறது. வாகனங்கள் கட்டுப்பாடற்ற வேகத்தில் வந்து செல்கின்றன.கடந்த சில தினங்களுக்கு முன் இதே இடத்தில் வேன் விபத்துக்குள்ளாகி ரோட்டோர கடைக்குள் புகுந்தது. தற்போது, வீட்டுக்குள் புகுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த ரோட்டை அகலப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
பொதுமக்களிடம் பேச்சு நடத்திய போலீசார், உரிய விபத்து தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்தனர். இதனால், மக்கள் கலைந்து சென்றனர்.