/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வேன் கவிழ்ந்தது டிரைவர் படுகாயம்
/
வேன் கவிழ்ந்தது டிரைவர் படுகாயம்
ADDED : நவ 09, 2024 12:40 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி; ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே கடத்துாரை சேர்ந்தவர் சதீஷ்குமார், 29. நேற்று சேலத்தில் இருந்து ஒரு வேனில், கோவைக்கு காஸ்டிங் பொருட்களை ஏற்றிக்கொண்டு வந்துள்ளார். அவிநாசி அருகே பைபாஸ் சாலையில், லாரியின் பின் மோதியதில், வேன் மோதி கவிழ்ந்தது.
இடிபாடுகளில் சிக்கிய, வேன் டிரைவர் மீட்கப்பட்டு, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவிநாசி போலீசார் விசாரிக்கின்றனர். விபத்து நடந்த பகுதியில், போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், போலீசார் விரைந்து சென்று வேனை அப்புறப்படுத்தினர்.