/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடிய துணை ஜனாதிபதி
/
குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடிய துணை ஜனாதிபதி
ADDED : ஜன 16, 2026 08:24 AM
திருப்பூர்: திருப்பூருக்கு வந்துள்ள துணை ஜனாதிபதி, பொங்கல் விழாவை குடும்பத்துடன் கொண்டாடினார்.
பொங்கல் பண்டிகையொட்டி கோவை, திருப்பூரில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க நேற்று முன்தினம் விமானத்தில் கோவைக்கு துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் வந்தார்.
பின், காரில் திருப்பூர் சென்றார். அங்கு இரவு தங்கிய அவர், நேற்று காலை குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் பொங்கல் விழாவை கொண்டாடும் வகையில் கணக்கம்பாளையம் பிரிவில் உள்ள டாலர் தோட்டத்துக்கு சென்றார்.
அங்கு அனைவருடனும் சேர்ந்து பொங்கல் விழாவை கொண்டாடி மகிழ்ந்தார். பின், கோவையில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். துணை ஜனாதிபதி வருகையொட்டி, போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் தலைமையில், துணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள் உள்ளிட்ட, 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

