/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சட்டென்று மாறுது வானிலை நடுங்க வைக்குது குளிர்!
/
சட்டென்று மாறுது வானிலை நடுங்க வைக்குது குளிர்!
ADDED : நவ 29, 2024 11:09 PM
உடுமலை: 'திருப்பூர் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் தணியத் துவங்கியிருக்கிறது' என, வானிலை மைய தகவல் தெரிவித்துள்ளது.
பொதுவாக, நவ., டிச., மாதங்களில் பனிப்பொழிவு துவங்கும்; தற்போது வட கிழக்குப்பருவ மழை பெய்து வரும் நிலையில், வானிலை மாற்றம் தென்படுகிறது. தமிழ்நாடு வேளாண் பல்கலை மற்றும் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் சார்பில், திருப்பூர் மாவட்டத்தின் வாராந்திர அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது.
அதன்படி, வரும், 2ம் தேதி வரை, வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை, 27 முதல், 30 டிகிரி செல்சியஸ் வரையும், குறைந்தபட்ச வெப்பநிலை, 20 முதல், 22 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.
காலை நேர காற்றின் ஈரப்பதம், 90 சதவீதம், மாலை நேர காற்றின் ஈரப்பதம், 50 சதவீதம் வரை பதிவாக வாய்ப்புள்ளது. சராசரியாக மணிக்கு, 8 முதல், 14 கி.மீ.,வேகத்தில் காற்று வீசக்கூடும்.
கடந்த வாரங்களை ஒப்பிடுகையில், திருப்பூர் வானிலையில், வெப்பநிலை வெகுவாக குறைந்திருக்கிறது.