/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஊரே திரண்டு போராடியும் பலனில்லை; ஏன் என்றும் கேட்க எவரும் வரவில்லை
/
ஊரே திரண்டு போராடியும் பலனில்லை; ஏன் என்றும் கேட்க எவரும் வரவில்லை
ஊரே திரண்டு போராடியும் பலனில்லை; ஏன் என்றும் கேட்க எவரும் வரவில்லை
ஊரே திரண்டு போராடியும் பலனில்லை; ஏன் என்றும் கேட்க எவரும் வரவில்லை
ADDED : ஜூலை 24, 2025 12:18 AM
பல்லடம்; ஊரே ஒன்று திரண்டு போராட்டம் நடத்தியும் அதிகாரிகள் எட்டிக் கூடப் பார்க்காதது, பல்லடம் அருகே, பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
பல்லடம் ஒன்றியம், ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி, அறிவொளி நகர் கிராமத்தில் வசிக்கும் பொதுமக்கள் பட்டா கேட்டு போராடி வருகின்றனர். கடந்த, 1993ம் ஆண்டு முதல் வசிக்கும், 1,008 குடும்பங்களை சேர்ந்தவர்களும், பட்டா வழங்க வலியுறுத்தி, 21ம் தேதி கடையடைப்பு மற்றும் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்போராட்டத்தின் போது, ஒட்டுமொத்த ஊர் மக்களும் ஒன்று திரண்டு, அறிவொளி நகருக்கு செல்லும் பிரதான ரோட்டில் கூடாரம் அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காலை, 9.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை போராட்டம் நீடித்தது. அதிகாரிகள் யாரேனும் பேச்சு வார்த்தைக்கு வருவார்கள் என பொதுமக்கள் எதிர்பார்த்து ஏமாற்றமே அடைந்தனர். இது, பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து போராட்டக் குழுவினர் கூறியதாவது:
கடந்த, 32 ஆண்டுகளாக பட்டா கேட்டு, நாங்கள் போராடுவது அதிகாரிகளுக்கு நன்றாகவே தெரியும். நாங்கள், அனைத்து ஆவணங்களையும் பெற்று, வீட்டு வரி, குடிநீர் வரி செலுத்தி வருகிறோம். இவ்வாறு இருக்க, வேறு இடத்துக்கு எங்களை மாற்றி குடிபெயர வைப்பதால், பல்வேறு பிரச்னைகளை நாங்கள் சந்திக்க நேரிடும். எனவேதான், எங்களுக்கு பட்டா வேண்டும் என போராடி வருகிறோம்.
இவ்வாறு, பட்டா கேட்டு நடந்த போராட்டத்துக்கு பாதுகாப்பு கொடுக்க வழக்கம் போல் போலீசார் மட்டுமே வந்தனர். ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டும், ஏன் என்று கூட கேட்க அதிகாரிகள் ஒருவர் கூட வரவில்லை.
எங்கள் கோரிக்கையை வலியுறுத்தி, விரைவில், மறியல் மற்றும் கலெக்டர் அலுவலக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.