/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தீரன் சின்னமலை கல்லுாரியில் பசுமையின் 'தீரம்' பேச மரக்கன்று
/
தீரன் சின்னமலை கல்லுாரியில் பசுமையின் 'தீரம்' பேச மரக்கன்று
தீரன் சின்னமலை கல்லுாரியில் பசுமையின் 'தீரம்' பேச மரக்கன்று
தீரன் சின்னமலை கல்லுாரியில் பசுமையின் 'தீரம்' பேச மரக்கன்று
ADDED : ஜன 01, 2024 11:20 PM

திருப்பூர்;'வனத்துக்குள் திருப்பூர் -9' திட்டத்தில், வஞ்சிபாளையம் தீரன் சின்னமலை மகளிர் கலை அறிவியல் கல்லுாரியில், மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டது.
திருப்பூர், மங்கலம் அருகேயுள்ள வஞ்சிபாளையத்தில், கொங்கு வேளாளர் அறக்கட்டளை சார்பில், தீரன் சின்னமலை மகளிர் கலை, அறிவியல் கல்லுாரி செயல்பட்டு வருகிறது. கல்லுாரி வளாகத்தில், 'வனத்துக்குள் திருப்பூர் -9' திட்டத்தில், நேற்று மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.
ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் வகையில், மரக்கன்று நட்டு கொண்டாடினர். கொங்கு வேளாளர் அறக்கட்டளை தலைவர் பெஸ்ட் ராமசாமி தலைமை வகித்தார். ஸ்தாபன தலைவர் 'ஜீப்ரா' பழனிசாமி, 'வெற்றி' அமைப்பின் தலைவர் சிவராம் முன்னிலை வகித்து, மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.
'வனத்துக்குள் திருப்பூர்' திட்டக்குழுவினர், கல்லுாரி குழுவின் பிரியதர்ஷினி ஈஸ்வரமூர்த்தி, ரேகா மகேஷ்குமார், தங்கராஜ் உள்ளிட்டோர் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.
கல்லுாரி நடைபாதை மற்றும் வளாகத்தில், மகிழம், இலுப்பை, தேக்கு, நெட்டிலிங்கம், துாங்குவாகை மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டன. 'வனத்துக்குள் திருப்பூர் -9' திட்டத்தில், மரக்கன்று நட்டு வளர்க்க விரும்புவோர், 90470 86666 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம் என, திட்டக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

