/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
காய்கறி வியாபாரி வீட்டில் திருட்டு
/
காய்கறி வியாபாரி வீட்டில் திருட்டு
ADDED : மே 14, 2025 11:08 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்,; திருப்பூர், பல்லடம் ரோடு, நொச்சிபாளையம் பிரிவை சேர்ந்தவர் குமரேசன், 54; தென்னம்பாளையத்தில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார்.
இவரது கடையில் பணியாற்றும் பானு என்பவரை, வீட்டில் வேலைகளுக்காக அழைத்து வந்தார். கடந்த சில நாட்களாக வேலைக்கு வந்து கொண்டிருந்த பெண், திடீரென வரவில்லை. பின், மீண்டும் சில நாட்களுக்கு வேலைக்கு வந்தார்.
இந்நிலையில், பீரோவில் இருந்த ஒரு லட்சம் ரூபாய், 6 சவரன் நகை மாயமானது தெரிந்தது. புகாரின் பேரில், வீரபாண்டி போலீசார் விசாரித்தனர். அதில், பீரோவில் இருந்த பணத்தை பானு, 40 திருடியது தெரிந்தது. அவரை போலீசார்கைது செய்தனர்.