/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தெக்கலுார் ரோட்டரி நிர்வாகிகள் பதவியேற்பு
/
தெக்கலுார் ரோட்டரி நிர்வாகிகள் பதவியேற்பு
ADDED : ஜூலை 23, 2025 11:25 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி; அவிநாசி அருகே தெக்கலுார் ரோட்டரி புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா, கொங்கு கலையரங்கில் நடைபெற்றது.
ரோட்டரி தலைவர் சுரேஷ்பாபு தலைமை வகித்தார். புதிய தலைவராக சிவகுமார், செயலாளராக அருள்குமார், பொருளாளராக பாரதி நடராஜன் மற்றும் ஆட்சி மன்றக்குழு, சேவைக்குழு நிர்வாகிகளும் பதவி ஏற்றுக்கொண்டனர். சிறப்பு விருந்தினராக முன்னாள் மாவட்ட கவர்னர் சிவசங்கரன், கவுரவ விருந்தினராக மாவட்ட கவர்னர் (தேர்வு) பூபதி ஆகியோர் பங்கேற்று புதிய நிர்வாகிகளை வாழ்த்தி பேசினர்.
முன்னதாக, தெக்கலுார் ரோட்டரிக்கு, புதிய உறுப்பினர்களாக, 19 பேர் பதவியேற்று கொண்டனர். செயலாளர் அருள்குமார் நன்றி கூறினார்.